10 வரி போட்டிக் கதை: நளிர் நிலா

by admin 1
46 views

“டாக்டர்.. டாக்டர்.. என் ஒய்ப்ஃக்கு சடர்னா என்னமோ ஆகிடுச்சி.. முகம் கை கால்ல எல்லாம் திடீர்னு சிவந்து போய் வீங்கிருச்சி.. என்னனு தெரில..
பிளீஸ் காப்பாத்துங்க டாக்டர்” என்று கதறியபடி இர்பான் அந்த பிரபல
மருத்துவமனையின் மருத்துவரிடம் கெஞ்சினான். நேரம் நள்ளிரவை
நெருங்கியிருந்தது.


“ஓகே.. ரிலாக்ஸ் ரிலாக்ஸ்.. இவங்க நைட் என்ன சாப்பிடாங்க? எத்தனை
மணிக்கு சாப்டாங்க? இதுக்கு முன்னாடி இந்த மாதிரி நடந்திருக்கிறதா?”
என்று மருத்துவர் கேள்விகளை அடுக்கினார்.“என் ஒய்ப்ஃ நளிர் நிலா நைட் டின்னர்க்கு நண்டுக்கறி சமைச்சாங்க டாக்டர்..


நான் வர 11 மணி ஆகிடுச்சி. அப்புறம் தான் ரெண்டு பேரும் சாப்பிட்டு
ரூமுக்கு போகவும் ‘எரியுதுங்க’ சொல்லி மயங்கிட்டா” என்று பதட்டத்துடன்பேசினான் இர்பான்.“இதுக்கு முன்னாடி நண்டு சாப்டுருகாங்களா? அவங்களுக்கு சீ-புட்(sea food)
அலர்ஜி இருக்கா?” என்று மீண்டும் கேள்விகளை தொடுத்தார்.


அவர்களுக்கு மணமாகியே ஒரு மாத காலம் தான் ஆகிறது. அப்படி இருக்க அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவன் முழிப்பதை பார்த்து சிகிச்சையளித்துக் கொண்டே மருத்துவரே பதிலுரைத்தார்.
“மிஸ்டர் இர்பான் க்ராப் சாப்பிடுவதால் நிறைய பெனிபிட்ஸ் இருக்கு.
வெயிட்லாஸ், அய்ஸ்(Eyes) ஹெல்த், இம்முனிட்டி பவர், ஹார்ட் ஹெல்த்,
மென்டல் ஹெல்த் இவ்வளவு ஏன் டயாபடீஸ் பேஷண்ட்ஸ் கூட தொடர்ந்து
எடுத்துகிட்டா இன்சுலின் இன்ஜெக்ட் பண்ண அவசியமே இருக்காது. பட்
சிலருக்கு ஒவ்வாமை இருந்தா உடம்பு ஏத்துக்காது.

அப்ப இது மாதிரி முகம் கை கால் உடம்பு எல்லாம் சிவந்து மயக்கம் ஏற்படும்” என்று விரிவாக சொன்னார் மருத்துவர். “டாக்டர்.. நாங்க சீக்கிரமே குழந்தை பெத்துக்கலாம்னு இருந்தோம். இது
ஹெல்த்க்கு நல்லது சொன்னதால இன்னைக்கு எடுத்துகிட்டோம்”
“சுயுர். க்ராப்ல(Crab) செலேனியம் அதிகம் இருக்கதால தைராய்டு
ஆக்டிவிட்டிஸ கண்ட்ரோல் பண்ணி ஹார்மோன் ப்ரொடக்ஷன இன்கிரீஸ்
செய்து பாடியை ஹீட்டா வச்சிக்கும்.

சோ ஆட்டோமேடிக்கா தாம்பத்ய உறவில் இண்ட்ரஸ்ட் வரும். சேம் டைம் க்ராப் அலர்ஜி இருந்தா இதை அவாய்ட் பண்றது நல்லது”
“ஓகே டாக்டர்” என்று சொல்லவும் நளிர் நிலா மயக்கம் தெளிந்து விழிக்கவும் சரியாக இருந்தது. “ஹாய் நளிர் நிலா? ஹௌ டூ யூ பீல் நௌ? பெட்டர்” என்று கேட்க தலையாட்டியவள் இருவரும் தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்று வெளியேறினர்.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14723-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!