எழுத்தாளர்: ரங்கராஜன்
மிருணாளிஅலுவலகத்திற்கு நேரமாகக விட்டதால், ஒடிப்போய் பேருந்து ஏற வேண்டிய நிலை. கணவன் அலுவலகம் செல்ல சாப்பாடு தயார் செய்து டிபன்பாக்ஸில் வைத்து க்கொடுத்தால் தான் கணவனுக்கு
திருப்தி.மகனுக்கு டிபன் ஊட்டி விட்டு
புத்தகப்பை, டிபனு பாக்ஸ், வாட்டர் பாட்டில் ரெடி செய்து வேனில் ஏற்றி, பிறகே மூச்சுவிட்டு பிறகே காலை 6/00மணிக்கு ப்போட்டு வைத்த ஆறிபாபோனதை மடக்கு மடக்கு, என்று குடித்து விட்டு ,டிரஸ் செய்து, டிபன்பாக்ஸை ஒரு கையிலும்,
ஹேண்ட் பேக்கை இன்னொரு கையிலும் எடுத்து ,பஸ் பிடிக்க ஒட,
அவள் போகும் பஸ் வர,ஒடிப்போய் ஏறியதில், செருப்பின் வார் அறுந்த
நிலையில் பஸ்ஸில் ஏறி நின்றுகொண்டே சென்று ஸ்டாப்பில் இறங்கி, அறுந்த செருப்புடன் கீழே இறங்கி செருப்பு த்தைப்பவனைத்
தேட,யாருமில்லாத நிலையில், ஊசி விற்கும் பெண் அக்கா, என்கிட்ட கொடுங்க என்ற படியே அறுந்த செருப்பில் ஊக்கைக்குத்தி அனுப்ப, அப்பாட, அப்புறம் தைத்துக்கொள்ளலாம் என்ற படியே அலுவலக வாசற்படி ஏறினாள் மிருணாளினி.
முற்றும்.