குறைந்த விலைக்கு
இடம் வாங்கினேன்.
அதிக விலையில்
வீடு கட்டினேன்.
வசந்தம் வந்ததென
வாடகை வீட்டை விட்டு
மனதில்
சங்கீத சாரலடிக்க
சந்தோச மழையடிக்க
வாழ வந்தேன்
என்வீட்டில்.
வெளியில்
என் வீடென
எடுத்தச் சென்றது.
பருவ மழை.
தப்பித்து வந்து
தடவிப் பார்த்தேன்
சாவிகள் மட்டும் மிச்சம்.
இயற்கையின் இடத்தை
வழி மறிந்த பாவத்திற்கு
வாடகை வீட்டில் மீண்டும்
செ.ம.சுபாஷினி