எழுத்தாளர்: பிரபாவதி ராஜா
லட்சுமி, லட்சுமி …. என்றழைத்தான் ராமன். ஓடி வந்தாள் லட்சுமி.
ராமன் லட்சுமியை தட்டிக் கொடுத்து ஏம்மா, இவ்வளவு நேரம் எங்கு போயிருந்தே என்று கேட்க, லட்சுமி அமைதியாக நின்றாள்.
லட்சுமி ராமனின் தாயாகவும் தோழியாகவும் வளர்ந்து வந்தாள். ராமன் வேலைக்குப் போவதே இல்லை. லட்சுமி தரும் பணத்தைக் கொண்டே குடும்பம் நடத்தி வந்தான்.
வருமானம் பற்றாக்குறையாகவே இருக்க, வேறு ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாமா? என்று யோசித்தான் ராமன்.
ராமன் மனம் துன்பப்படுவதைக் கண்ட லட்சுமிக்கு ஒரு யோசனை தோன்றியது.
தான் ஒன்றைக் கொண்டு வந்து ராமனின் முன் காட்டியது.
ஆச்சர்யத்துடன் அதைப் பார்த்த ராமனுக்கு சட்டென்று உதித்தது ஒரு திட்டம்
அதுதான் இந்த பாக்கெட்டு பால் விநியோகமா? எனக் கேட்க,
ஆம் என தலையசைத்தவருடன் லட்சுமியுடன் அவளது கொம்புகளில் உள்ள பலூன்களும் ஓடியது.
ஓஹோ! பேஷ் பேஷ்! சரியான ஐடியா என மகிழ்ந்தான் இராமன்.
முற்றும்.