காதல் படப் போட்டி கதை: நிலவே பதில் சொல்லு

by admin 2
50 views

எழுதியவர்: நந்தினி கிருஷ்ணன்

மிருதுளா –  ரவி இருவரின் திருமணமும் மிகச் சிறப்பாக நடந்தது.  மிருதுளாவிற்கு சிறு வயதிலிருந்து வேலைக்கு செல்லும் ஆர்வம் இல்லை அவள் அம்மா வேலைக்கு சென்றதால் அவள் மிகவும் தாயின் பாசத்திற்காக ஏங்குவாள் களைப்புடன் வரும் அம்மா வந்தவுடன் வீட்டு  வேலையில் மூழ்கி விடுவாரே தவிர ஒரு நாளும் மிருதுளாவை கொஞ்சி பேசியது கிடையாது.

அதற்காக அம்மாவிற்கு பாசம் இல்லை என்று அர்த்தம் இல்லை. அம்மாவுக்கு ஒரே மகள் என்பதால் மிகவும் பிடிக்கும். இருந்தாலும் சூழ்நிலை காரணமாக அம்மாவும் வேலைக்கு போய் சம்பாதித்ததால் தான் அவர்கள் குடும்பம் சிறப்பாக நடந்ததாக அவளுடைய அப்பா சொல்லுவார்.

ரவி நன்றாக படித்து  அதிகமாக சம்பாதிப்பதால் அவனுக்கும் தன் மனைவி வீட்டில் இருப்பது மிகவும் பிடிக்கும் அதிலும் மிருதுளா தன் கணவன் வெளிநாடு செல்லவே கூடாது  இந்தியாவிலேயே இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் ரவிக்கு திடீரென்று லண்டன் செல்ல வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டது இதனால் மிகவும் மனம் சோர்ந்து போனாள்.

அவனுக்கு மட்டும் தான் விசா கிடைத்தது என்பதால் அவன் தன் அம்மா வீட்டிலேயே தன் மனைவியை விட்டுவிட்டு லண்டனுக்கு சென்று விட்டான். மிருதுளாவுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. தன் அன்பு காதலன் கணவன் தன்னை விட்டு வெளிநாடு சென்று விட்டாரே என்று அவர் எப்போது தன்னை அழைத்துக் கொள்வார் என்று நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள்.

திருமணமான  புதிதில் நிலா வரும் போது இருவரும் அமர்ந்து ஆசையுடன் காதல் வார்த்தைகள் பேசிய நினைவு வந்து அவளை சந்தோஷப்படுத்தினாலும் கணவனை பார்க்க முடியவில்லை என்று வருந்தினாள்.

அவளுடைய மாமனார் மாமியார் அவளை மிகவும் அருமையாக சந்தோஷமாக வைத்துக் கொள்ள  முயன்றாலும் அவளுக்கு கணவன் தன்னுடன் இருக்க வில்லையே என்ற ஒரு வருத்தம் இருந்தது.

இரவு நேரத்தில் தூக்கம் வராமல் இருக்கும் போது அந்த நிலவைப் பார்த்து “நிலவே நீ ஏன் இங்கு வருகிறாய் என் கணவர் என்னை விட்டு ஊருக்கு சென்று விட்டார்” என்று அதனுடன் மௌன பாஷையில் பேசுவாள்.

நிலவு பதில் சொல்லாது என்று தெரிந்தும் நிலவைப் பார்த்து “நிலவே பதில் சொல்லு. நான் எப்போது என் கணவருடன் சென்று சேர்வேன்” என்று அதைப் பார்த்து பேசுவாள்.

ஆனால் அவளுக்கு வெளிநாடு செல்ல வேண்டிய விசா கிடைக்க மிகவும் தாமதமாக ஆனது அதற்குள் வெளிநாட்டில் இருந்த. ரவி ஒரு விபத்தில் இறந்து விடவே அவளால் அந்த செய்தியை ஜீரணிக்கவே முடியவில்லை. அப்போதும் நிலவைப் பார்த்து “நிலவே பதில் சொல்லு என்னை இங்கே தவிக்க விட்டு விட்டு அவரை அழைத்துக் கொண்டாயே” என்று அவள் அழுவதை பார்த்து அவர் மாமனாரும் மாமியாரும் மிகவும் வருந்தினார்கள் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை காதல் அதிகமானால் இப்படித்தான் ஆகுமோ கடவுளுக்கு காதலிப்பவர்களை கண்டாலே பிடிக்காதோ என்று மிருதுளா தினமும் புலம்பிக் கொண்டிருந்தாள்.  

அவளுடைய ஒரே ஆறுதல் அவள் வயிற்றில் வளரும் ரவியின் வாரிசு தான் அதற்காக அது வெளிய வந்து தன்னை ஆசையுடன் பார்த்துக் கொள்ளும் என்று மகப்பேறு நாளுக்காக காத்துக் கொண்டிருந்தாள் மிருதுளா.

முற்றும்!..

You may also like

Leave a Comment

error: Content is protected !!