காதல் படப் போட்டி கதை: புள்ளினங்களுக்கும் காதல் வரும் 

by admin 2
54 views

எழுதியவர்: வெ.  முத்துராமகிருஷ்ணன்

பல வருடங்கள் மும்பையில் குடித்தனம் செய்து கொண்டிருந்த. ராதாவும் அவளுடைய கணவர் கிருஷ்ணனும் இப்போது ஓய்வு பெற்ற நிலையில் சென்னையில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் புதிதாக குடி வந்திருந்தனர்.  

இரண்டு பிள்ளைகளைப் பெற்றாலும் ஒருவருக்கும் இந்தியாவில் இருக்க விருப்பம் இல்லாமல் அனைவரும் வெளிநாட்டில் வேலை பார்க்க ராதா கணவருடன் சென்னை வீட்டில் குடியிருந்தாள். 

சிறு வயது முதலே அவள் பாட்டியிடம் வளர்ந்ததால் சமையல் செய்வதில் மிகவும் ஆர்வம் பாட்டி செய்யும் புதுமையான சமையல்களை எல்லாம் கற்றுக் கொண்டிருப்பதால் அவள் திருமணம் முடிந்த பிறகு தினமும் விதவிதமாக தன் கணவருக்கு சமைத்து போடுவாள்.

பழைய நினைவுகளுடன் படுக்கையில் படுத்துதல் அப்படியே உறங்கிப் போனாள்.

கணவருக்கு நிச்சயமாக விதவிதமாக சமைத்து போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே உறங்கியவள் மறுநாள் காலை காக்கையின் குரல் கேட்டு கண்விழித்தாள்.  அப்போதுதான் அவளுக்கு தான் இருப்பது மும்பை இல்லை சென்னை என்று நினைவு வந்தது.

சமையல் என்று எந்தவித அவசரமும் இல்லாததால் உடலை சோம்பல்முறித்து கொண்டு அருகில் இருக்கும் கணவன் உறங்குவதை பார்த்து தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள்.

எப்போதும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருந்தவர் இப்போது ஓய்வெடுத்துக் கொள்வது அவள் மனதுக்கு பிடித்திருந்தது.

தலைகை கோதி சரிசெய்து கொண்டு பால்கனிக்கு வந்தாள்.  அங்கே இருந்த லைட் கம்பத்தில் இதயம் போன்ற ஒரு காக்கைக்கூடு இருப்பதை பார்த்து  ஆஹா காக்கைகள் கூட காதல் செய்கின்றனவே என்று ஆசையுடன் பார்த்தாள்.

அந்த காக்கைகள் கட்டிய கூடு அவள் கண்களுக்கு இதயம் போன்றே தெரிந்தது.  இரண்டும் ஒன்றைப் பார்த்து கா…….கா….என்று கத்துவதை பார்த்து இது காதலர் தினம் அல்லவா காக்கைகள் கூட காதலிக்கின்றன மனிதனுக்கு மட்டும்தான் காதல் உணர்வா பறவைகளுக்கும் இருக்குமே என்று எண்ணி அது இரண்டும் பேசுவதை கற்பனை செய்து கொண்டு மனதுக்குள் சிரித்து  கொண்டாள். 

பல வருடங்களாக இயந்திரம் போன்று இயங்கும் மும்பையில் வசித்ததால் அவளால் இது போன்று  இயற்கை காட்சியும் பார்த்ததில்லை. ஆனால் இப்போது சென்னைக்கு வந்தவுடன் அவள் பிறந்து வளர்ந்த இடம் என்பதாலோ என்னவோ மிகவும் பிடித்தது அதிலும் அவள் இருக்கும் அந்த அடுக்குமாடி உயரத்தில் இருப்பதால் மேலிருந்து கீழே எல்லாவற்றையும் பார்க்கும்போது மிகவும் ரம்யமாக இருந்தது. அவள் மனதில் நீங்காத இடம் பெற்ற அந்த காக்கை பற்றிய செய்தியை கணவருடன் சொல்ல உள்ளே சென்றாள். 

சமையலறையில் காபி பில்டரில் காபி பொடி போட்டு உயிரை ஊற்றி அடுப்பில் பாலை வைத்தாள். அதற்குள்  கணவன் பல் தேய்த்து விட்டு வருவதைப் பார்த்து அவருக்கு காபி கலந்து கொடுத்துக்கொண்டு தான் பார்த்து ரசித்த காக்கை காட்சியை அழகாக விவரித்தாள்.

தன் மனைவி குழந்தை போன்று பேசுவது ரசித்துக்கொண்டு அவள் கொடுத்த காப்பியை குடித்தார் கிருஷ்ணன்.  

எத்தனை வயதானாலும் காதல் உண்டு என்பது போல இருவரும் அங்கு வாழ்க்கை நடத்துவதை  அவர்கள் பிள்ளைகள் ரசித்து கேட்டனர்

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!