காலை நேர வேளையில்
சாலையில் அடுக்கப்பட்டு
மலையென உயர்ந்த அனைத்து வண்ண கரடி பொம்மைகளும் எண்ணத்தை கவர்ந்து போகிறவர்களை திரும்பிப்
பார்க்க வைப்பது திண்ணம்.. பொம்மை கடை அருகே
வறுமையான தாய் சேயுடன் பொறுமையாக பூக்கள்
கட்டி விற்கும் கடையை போட
அருகில் உள்ள பொம்மைகளை சேய் விழித்து ஏக்கத்துடன் பார்க்க பொம்மை வியாபாரியும்
மஞ்சள் வண்ணக் பொம்மையை கெஞ்சாமலே சேயிடம் கொடுக்க
பஞ்சம் இல்லா மகிழ்வுடன் அந்த அஞ்சு வயது மழலை
கொஞ்சி முத்தமிட்டு மகிழ்ந்தாள்
உஷா முத்துராமன்