எழுத்தாளர்: ரியா ராம்
அந்த அறையில் அப்போது தான் கண் விழித்த அருணா தான் இருக்கும் இடத்தை பார்த்தாள் அவள் கண்களுக்கு முதலில் எதுவும் புரியவில்லை.
அப்போது தான் அந்த அறையை சுற்றி பார்த்தாள் அது ஒரு மருத்துவமனை என தெரிந்தது.
உடனே அவளுக்கு என்ன நடந்தது என நியாபகம் வந்தது.
“அவள் அருணா அவளுக்கும் ஆனந்த் என்பவனுக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் முடிந்தது”
இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழ திட்டமிட ஆனால் அதற்க்குள் அவர்கள் இருவரின் பெற்றவர்களும் அவர்களை தேன்நிலவுக்கு ஊட்டி அனுப்பி வைத்தனர்.
அவர்களும் முதலில் நல்ல நண்பர்களாக பழக நினைத்து அந்த பயணத்தை ஆரம்பித்தனர்.
இருவரும் ஊட்டியின் ஒவ்வொரு இடத்தையும் இரண்டு வாரங்களாக சுற்றி பார்த்து நண்பர்களாக இருந்தவர்கள் காதலர்களாக மாறினர்.
ஒருவர் மற்றொருவரின் மீது காண்பிக்கும் அன்பில் இரு நெஞ்சங்களுக்கும் காதல் பிறந்தது ஆனால் இருவரும் அதை சொல்லாமல் தங்கள் மனதில் வைத்துக் கொண்டே அந்த ஊட்டி பயணத்தை முடித்து விட்டு தங்கள் காரில் ஊருக்கு கிளம்பினர்.
அப்போது எதிர்பாரத விதமாக எதிரே வந்த லாரியில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. லாரி இடிக்க வருவதை பார்த்த ஆனந்த் அருணா கைகளை பிடித்துக் கொண்டு ஐ லவ் யூ அருணா என சொல்லி முடிக்க சரியாக அந்த லாரி அவர்கள் காரை இடித்து தள்ளியது அதில் கார் இரண்டு தடவை அந்த ரோட்டில் உருண்டு பாலத்தின் மீது மோதி நின்றது.
ஆனந்த் சீட் பெல்ட் போட்டதால் அவன் சிறு சிறு காயங்களுடன் அரை மயக்க நிலைக்கு போக அருணா லாரி காரை இடித்த அதிர்வில் கார் கண்ணாடியில் தலை இடித்து கார் உருண்டு சென்றதில் கார் கதவு திறந்து வெளியே தூக்கி வீசப்பட்டாள். அதில் அவளுக்கு உடல் முழுதும் நிறைய காயங்கள் ஏற்ப்பட்டது.
அருணா கடைசியாக தன் கணவன் இருந்த காரை பார்த்து கொண்டே தன் நினைவை இழந்தவள் இப்போது தான் கண் விழித்தாள்.
அருகில் யாரும் இல்லாததால் தன் கணவனுக்கு என் ஆயிற்று என பயந்தவள் ஆனந்த் என கத்த ஆரம்பித்து விட்டாள். அவள் சத்தம் கேட்டு ஓடி வந்த நர்ஸ் அவளை சமாதானப்படுத்தி டாக்டரை அழைத்து வந்தார்.
அவரும் அவளை செக் செய்து விட்டு அவளிடம் சில கேள்விகள் கேட்க அவள் ஆனந்த் என்ற பெயரையே மாற்றி மாற்றி சொல்லி கொண்டு இருந்தாள்.
டாக்டர், இங்க பாரு மா யாரு ஆனந்த்
அருணா, அவர் என் கணவர் என் கூட அவரும் இருந்தார் அவருக்கு என்ன ஆச்சு அவரை காணும் என புலம்ப ஆரம்பிக்க
அப்போது தான் நர்ஸின் அழைப்பில் உள்ளே வந்த ஆனந்த் அங்கு தன் பெயரை சொல்லி புலம்பி கொண்டு இருக்கும் மனைவியின் குரலை கேட்டு வேகமாக அவளிடம் சென்றான்.
ஆனந்த், அருணா எனக்கு ஒன்னும் இல்ல இங்க பாரு நான் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க உனக்கு வலி இருக்கா என
ஆனந்தின் குரல் கேட்ட அருணா அவன் கேட்ட எதற்க்கும் பதில் சொல்லாமல் அவனை அவனை உச்சி முதல் பாதம் வரை பார்க்க அவனுக்கு தலையில் சிறிய அடி மட்டும் இருந்தது அதை பார்த்த பின்பு தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.
அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்த ஆனந்த் முதலில் மருத்துவரிடம் அவள் நிலைமையை விசாரிக்க
மருத்துவர், மிஸஸ் அருணாவுக்கு தலையில் சின்ன அடி தான் ஆனா காலில் பலமான அடி பட்டு இருக்கு அவங்க கைகளிலும் அப்படி தான் அதனால அவங்க எழுந்து நடக்க ஒரு மாதம் ஆகும்.
ஆனா பழைய படி உடல் தேறி அவங்க முழுசா குணமாக மூனு மாதம் ஆகும் . அதாவது நீங்க உங்க தாம்பத்திய வாழ்க்கையை ஆரம்பிக்க இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் அது வரை நீங்க அவங்கள நல்ல படியா பார்த்துக்குங்க என்று மருத்துவர் கூறி விட்டு சில மருந்துகளை எழுதி கொடுத்து விட்டு அந்த அறையை விட்டு வெளியேற
ஆனந்த் அருணா அருகில் வந்த அவள் கையை பிடித்து கொண்டு அமர்ந்தான் மருத்துவர் பேசியதை கேட்ட அருணா கண்ணீருடன் அவனை பார்க்க ஆனந்த் அவள் கண்ணீரை துடைத்து விட்டு அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.
அவள் எதுவோ பேச வர அவளை ஒரு பார்வையில் அடக்கியவன்
ஆனந்த், இங்க பாரு இனிமே நான் தான் உன்ன பார்த்துக்க போறேன் நீ வேற எதாவது மனசுல வைச்சி கிட்டு பேசாம நான் பண்றது எல்லாத்தையும் ஏத்துக்க சரியா ஒரு மூணு மாசம் தான் அதுக்கப்புறம் எல்லாம் சரியாயிடும் நீ எதுவும் லூசு மாறி யோசிக்காத நன் போய் டாக்டர பார்த்துட்டு வாரேன் என்றவன் வெளியே எழுந்து சென்று விட்டான்.
அவன் சொன்னது போல் தான் அவளும் நினைத்து இருந்தாள் என்ன அவனை பிரிய நினைக்கவில்லை தன் உடல்நலம் சரியாகும் வரை தனது அம்மா வீட்டில் இருக்க நினைத்தாள் ஆனால் அதை புரிந்து கொண்ட ஆனந்த் தானே அவளை பார்த்து கொள்வதாக சொன்ன உடன் அவன் மேல் இருக்கும் அன்பு கூடியது.அவளும் எதுவும் நினைக்காமல் மருந்தின் வீரியத்தில்
தூங்க ஆரம்பித்தாள்.
வெளியே வந்த ஆனந்த் தானே தன் மனைவியை பார்த்துக் கொள்வதாக சொல்லி தன் பெற்றோர் மாமனார் மாமியார் எல்லோரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான் .
அவன் சொல்லியது போலவே அவளை ஒரு குழந்தை போல் பார்த்து கொண்டான். அவள் சிறு சிறு தேவைகளையும் முகம் சுளிக்காமல் ஒரு அன்னை போல் அவள் உடன் இருந்து கவனித்து கொண்டான்.
அவனின் அன்பில் அவளும் விரைவிலேயே குணமடைந்தாள்
அதன் பின் இருவரும் தங்கள் வாழ்க்கையை தொடங்கி சந்தோசமாக வாழ தொடங்கினர்.
இப்போது அவர்களுக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று என இரு குழந்தைகள். எத்தனை குழந்தைகள் வந்தாலும் அவனுக்கு அவள் தான் முதல் குழந்தை.
அருணாவும் தன் வாழ்க்கையில் வந்த ஆண் தேவதையாகவே ஆனந்தை பார்த்தாள்.
யார் சொன்னார்கள் தாய்மை என்பது பெண்களிடம் மட்டுமே உண்டு என்று ஆண்களிடமும் தாய்மை உண்டு அவர்கள் அன்பின் ஆழம் அதிகம் .