ஒரு பக்க போட்டிக்கதை: தாய் மனம்

by admin
84 views

எழுத்தாளர்: பானுமதி நாச்சியார்

அம்மா என்னம்மா காலையில் சும்மா சும்மா நின்னு நின்னு அம்மா அம்மா என்று கூப்பிடாதே கூப்பிடாதேன்னு எத்தனை தடவை சொல்றது  வைதேகி

என்ன குழந்தையாநீ காலேஜ் படிக்கிற ஞாபகம் வச்சுக்கோ

அம்மா என்றாள் திரும்பவும்

சரி என்னன்னு சட்டுன்னு சொல்லிட்டு கிளம்பு என்றாள்

சும்மா நின்னுட்டு இருந்தால் அப்பா பார்த்தால் என்னைத்தான் திட்டுவார் ஏற்கனவே உன்னைச் சரியாக வளர்க்கவில்லை என்று குற்றம் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார்

ஒரே பொண்ணு நான் தான் உனக்குச்செல்லம் அதிகம் கொடுக்கிறேன் என்று தோன்றுகிறது

அப்பா கிட்ட சாதிக்க முடியாததை என்னிடம் சாதித்து விடுகிறாய் பெத்த பாசம் என்று சொன்னாலும் என்னோட மனசு அடிக்கடி குற்ற உணர்வாய் எடுத்துக் கொள்கிறது

அப்படி என்னம்மா நான் உன்னைக் குற்றம் சொல்ல.. குற்றம் செய்யச் சொன்னேன் என்றாள் வைதேகி

பேச்சுத் தொடர்கிறது என்று எண்ணிய மாலா சரி சொல்லு என்றாள்

 எனக்கு வைதேகி என்று பெயர் உனக்கு மாலா என்று பெயர் என்ன இது

என்ன அதுக்கு

மாலா அது எங்க வீட்ல வச்ச பேரு

அப்பா தான் உனக்கு வைதேகி என்று வைக்க சொன்னார் என்றாள்

ஏன் சுயவரம் வைப்பாரோ

ஏண்டி இன்று ஒரு மாதிரியா வம்புக்கே வருகின்றாள்

 சரி ஏதோ சொல்லனும் சொன்னியே சொல்லு என்றாள்

அம்மா அதுதான் அந்த அவர்  நாளைக்கு வீட்டுக்கு வரேன் என்று சொன்னார்

தூக்கி வாரி போட்டது மாலாவுக்கு என்னடி சொல்ற இதுக்குத்தான் நான் மெதுவாக சொன்னேன் என்றாள்

 உங்க அப்பா பார்த்த என்ன நடக்கும் தெரியுமா

தெரிந்தால் தானே அவரை வேறு விதமாக அறிமுகப்படுத்தப் போறேன்

இது நல்லா இல்ல

இது என்ன சுயவரமா என்றாள் மாலா

அப்படியே வச்சுக்கோங்க

அவர்தானே பெயர் வைத்தார்

மறுநாள் அவள் சொன்னபடியே கூட்டி வந்தாள் 

அப்பா பாவம் எதுவும் தெரியாததால் யாரு அவர் என்ன வேண்டும் என்றார்

அம்மாவைப் பார்க்க வந்தேன் என்றான்

 அம்மாவையா

 அதாரு

 உங்க வீட்டும் மாவைத்தான் சார் என்றான் அவன்

எப்படி உனக்கு தெரியும்

இதற்குள் வைதேகி வரவே அவன் கண் ஜாடையில் அவளிடம் பேசினான்.

இது தெரிந்து கொண்டாரா என்பது கூடத் தெரியாமல் அவளும் பதில் சொன்னாள்

உனக்கும் தெரியுமா என்றார்

ஆமாம் அப்பா அம்மாவுடன் போகும் போது பேசியிருக்கிறேன்

இதெல்லாம் எப்போ மாலா மாலா என்று அதட்டும்குரலில் கூப்பிடவே அவளும் அரக்க பரக்க வந்தாள்

இவன் யாரு உனக்குத் தெரியுமா இல்லை  சொந்தமா இவனைப் பார்த்ததே இல்லையே என்றார்

இதற்குள் இடை மறித்த வைதேகி அப்பா இவர் எனக்கு சீனியர் காலேஜில் நல்லா கணக்கு போடுவார் சில சந்தேகங்கள் கேட்டால் உடனே செய்து கொடுப்பார் அம்புட்டுத்தான் என்றாள்

அவர் மனம் சமாதானமாகாமலே அவ்விடத்தை விட்டு அகன்றார்

அடுத்து இவர்கள் மட்டும் என்பதால் திரும்பவும் மகிழ்ச்சி தொற்றிக்கொள்ள நேரம் போனதே தெரியவில்லை

அதற்குள் மாலாதான் தம்பி சீக்கிரம் கிளம்புங்க அவர் வந்தால் கோபிப்பார் என்று சொன்னாள்

 ஆகா அம்மாவிடம் சம்மதத்தை வாங்கியதால் பெருமை தானே என்று கிளம்பினான்

அதன் பிறகு அவன் இவர்கள் வீட்டைக் கடந்து செல்வதும் அவனுக்குச் சொந்தக்காரர் வீட்டில் இருப்பதும் அவளுக்காகக் காத்திருப்பதும் அவள் வந்தவுடன் பேசிப் பேசி பஸ்ஸில் ஏற்றிவிட்ட பின் போவதும் வாடிக்கையானது

அவளது சொந்தக்காரர் களுக்குச் சந்தேகம் வரவே

தம்பி இது என்ன தம்பி எங்க வீட்டில் வைத்து நீங்கள் இப்படி செய்வது எனக்குப் பிடிக்கவில்லை எனக்கும் இரண்டு மகள்கள் உண்டு என்றார்

அந்த அம்மாவிற்குத் தெரியும் நீங்க பயப்பட வேண்டாம் அடுத்த மாசம் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றான்

இன்னும் சில மாதங்களில் அவள் படிப்பு முடிந்துவிடும் என்றார் அவர்

ஆமாம் அது திருமணம் நடந்த பின்னும் தொடரும் என்றான்  அவன் குரலில் தீர்க்கம் தெரிந்தது

இதற்குள் அவர்கள் வீட்டில் அப்பாவிற்கும் தெரியவர ஒரே பெண் அம்மை கூட்டா என்று கத்தினார்

மேலும் படிப்பு முடியும் வரை மகளுடன் தாயும் காலேஜ் வரைக்கும் சென்று பின்கூட்டிக் கொண்டு வா என்று முடிவாகியது

அவ அவனை கூட்டிக் கொண்டு ஓடினால் முதல் பலி நீதான் என்றார் மாலாவிடம்

மாலாவுக்கும் அவனைப் பிடித்திருந்ததாலும் அவனை வைதேகி ஆசைப்பட்டதாலும் சரி சரி என்று போனாள்

அவன் சொன்ன மாதிரியே குறிப்பிட்ட நாளில் கோவிலில் திருமணம்  பின் பக்கத்தில் உள்ள ரிஜிஸ்டர் ஆஃபீஸில் ரிஜிஸ்டர் செய்யவும் முடிவு பண்ணி அதனைத் தன் அம்மாவிடம் சொல்லி சம்மதமும் வாங்கி விட்டான்

அன்று போகும்போது அப்பாவை தொட்டு கும்பிட்டாள் வைதேகி

வணங்குதல் எதற்கு என்பது போல் பார்க்கிறார்

 இன்று தேர்வு என்கிறாள்

சரி நன்றாக எழுது என்கிறார்

மறுபடியும் கூடப் போகிறாள் மாலாவும்

காலேஜ் வந்தவுடன் அவள் அவனுடன் வேறு இடத்திற்குச் செல்கிறாள். கோவில் திருமணம் முடிந்து அங்கே பக்கத்திலேயே இருக்கும் ரெஜிஸ்டர் ஆபீஸ் செல்கிறாள் வருவதற்கு தாமதம் ஆகிறது

அதற்குள் அப்பாவிடம் இருந்து ஏகப்பட்ட போன் அவருக்கும் தெரிந்திருக்கும் போல்

அவள் இன்னும் ஒரு மணி நேரத்தில் என் வீட்டில்கூட்டி வரவில்லை என்றால் உன்னைத் தொலைத்து விடுவேன் என்கிறார்

சரி ஒரு தப்பும் நடக்கலை வருகிறேன் என்கிறாள் மாலா

மகளை மருமகனையும் வாழ்த்தி விட்டு நான் முன்னாடி செல்கிறேன் நீங்கள் பின்னாடி வாருங்கள்

நான் முன்னே செல்கிறேன் என்றவள் வேமாக பஸ்ஸில் ஏறினாள்

 வீட்டிற்கு அவள் மட்டும் வருவதைக் கண்டவர் பயங்கர கோபத்தில்

உன் பொண்ணு எங்கே என்று

பின்னாடி வருகிறார்கள் என்கிறவள்

 தன் அறைக்குள் செல்கிறாள்

சிறிது நேரத்தில் மகளும் மருமகளும் இங்கு வர பயந்து அவர்கள் வீட்டுக்குச் செல்கின்றனர்

 அவர்கள் வீட்டில் சம்மதம் என்பதால்

இவர் கோபத்துடன் மாலாவின் ரூமுக்கு அருகில் நின்று மாலா அவன் கல்யாணம் செய்துகொண்டு வந்திருப்பான் போலத் தெரிகிறது என்றவர்

 இது உனக்குத் தெரியுமா என்கிறான்

ஆமாமம் இல்லை என்ற எந்த பதிலும் வராமல் இருக்கவே

என்னுடன் வா  என்று கதவைத் தட்டுவதற்குப் போக கதவோ தானாத் திறக்கிறது  

தொலைந்தாய் நீ என்றவர் வார்த்தைகள் வராமல் அப்படியே கல்லாக சமைந்தார்.

மாலா என்று கத்திய அவரது அலறல் அந்த வீதியையே பயமுறுத்த எல்லாரும் …அனைவரும் அவர் வீட்டில் நோக்கி வர மாலா தன்னை மாய்த்துக் கொண்டாள் என்ற விவரம் தெரியும்போது யாருக்கும் ஒன்றும் செய்யத் தோணவில்லை

மகளும் மருமகனும் கேள்விப்பட்டு பதறி அடித்துக் கொண்டு வர சலனம் இல்லாமல் மெல்லிய புன்னகை உதட்டோரம் தெரிய ஹாலில் படித்திருக்கிறாள்.. இல்லை இல்லை படுக்க வைத்திருக்கிறார்கள்

தாய் மனம் என்பது வேறு அதனைப் புரியும்போது மகள் என்செய்வாளோ ..

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

Leave a Comment

error: Content is protected !!