எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
நானும் இரண்டு வருடங்களாக சுமதியை காதலித்து வருகிறேன். நான் பட்டம் வாங்கி விட்டேன். நான் படித்த கல்லூரியிலே சுமதி படித்து வந்தார். கொள்ளை அழகு. நாளும் விதவிதமாக உடை அணிவார். நான் முக்கிய சாலையில் உள்ள ஒரு டீ கடையில் இருந்து காலை மாலை இரண்டு நேரமும் சுமதியை பார்த்து வந்தேன்.
அவருக்கு நன்றாகவே தெரியும். நான் அவரை காதலிக்கிறேன் என்று. இனியும் காதலை தள்ளி போட விருப்பம் இல்லை. எனவே அவர் கல்லூரி முகவரிக்கு ஒரு நீண்ட காதல் கடிதம் எழுதினைன். மொத்தம் 27 பக்கங்கள். அதில் வரும் வெள்ளி கிழமை என்னை பிடித்து இருந்தால் சேலையில் வாருங்கள். இல்லை என்றால் சுடிதார் அணிந்து வாருங்கள் என உருக்கமாக எழுதினேன்.
வெள்ளிக்கிழமை. காலை 9.40… சுமதி வருவதை பார்த்து விட்டேன். சேலையும் அல்ல. சுடிதாரும் இல்லை. அவர் பாவாடை தாவணியில் வந்தார். எனக்கு வருத்தம். கோபம்.
மீண்டும் ஒரு கடிதம் எழுதினேன். இந்த முறை பிடித்து இருந்தால் சுடிதாரில் வர வேண்டினேன். இல்லை என்றால் சேலையில் வாருங்கள் என்று எழுதினேன்.
வெள்ளிக்கிழமை. 9.40 காலை. சுமதி வருவதை நான் பார்த்து விட்டேன். அவர் சுடிதாரிலும் வரவில்லை. மேலும் சேலையிலும் வரவில்லை. மஞ்சள் நிறத்தில் ஒரு மினி போட்டுக் கொண்டு வந்தார்.
எனக்கு டென்ஷன். பதட்டம். சரி… இனி கடிதம் எழுத போவதில்லை. நேரே கல்லூரி சென்று பேசுவது என்று முடிவு எடுத்தேன்.
மினி… மினி…?
திமிறு பிடித்தவள்..!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.