எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
நான் தமிழக அரசில் கருவூல பிரிவில் வேலை பார்த்து வந்தேன். ஊட்டி தான். அப்போது புது அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி சேர்ந்தார்.
அவர் சோசியல் டைப். எல்லோருடனும் நன்கு பழகுவார். என்னோடு வேலை செய்த ஸ்ரீ ராம் அவருடன் நெருங்கி பழகினார். அப்போது ஜெயந்தி தான் ஒருவரை காதலிப்பதாகவும்… அவர ஐதராபாத்தில் பணி செய்து வருகிறார் என்று சொன்னார்.
மேலும் ஒரு உதவி ஸ்ரீ ராமிடம் கேட்டார். தனது காதலர் ஸ்ரீ ராமுக்கு அனுப்புவர். அதை வாங்கி கொடுத்து விடுங்கள்.
ஸ்ரீ ராமுக்கு பிறருக்கு உதவி செய்வது என்றால் பெரிய விருப்பம்.
சுமார் 6 மாதங்கள் காதல் கடிதம் வந்தது. பின்னர் நின்று விட்டது. நான் ஜெயந்தியிடம் கேட்டேன் அதற்கு காதல் முறிந்து விட்டது என்றார்.
மேலும் ஒரு ஷாக்..! அதிர்ச்சி…!! ஜெயந்தி ஸ்ரீ ராமிடம் தான் ஸ்ரீ ராமை விரும்புவதாகவும் சொன்னார். ரொம்ப யோசித்து சம்மதம் தெரிவித்தார். ஸ்ரீ ராம்…. ஜெயந்தியின் பழைய காதலன் பற்றி யோசித்தார்.
அவருக்கு அவர் மீது பரிதாப உணர்ச்சி ஏற்பட்டது. ஆனால் ஜெயந்தியை அவருக்கு பிடித்து இருந்தது.
ஜெயந்தி ஸ்ரீ ராம் மூன்று முடிச்சு போட்டனர்.
மறுநாள்… பத்திரிகையில் ஒரு செய்தி.. ஊட்டியை சேர்ந்தவர் தூக்கில் தொங்கினார்..!!!
காதல் தோல்வி…!!!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.