எழுத்தாளர்: பாரதிராஜன்
எங்களுடைய குடும்பம்பெரிய குடும்பம். நான்தான் மூத்தமகன். என் தந்தை கையூட்டு வாங்காத அரசு ஊழியர். நான் பட்டபடிப்பு முடித்த உடன்,முதுகலை படிப்பு படிக்க விண்ணப்பம் வாங்கினேன். தற்காலிக வேலை செய்து வந்தேன். மாலை வேளைகளில் பனகல் பூங்காவில் என்ன மாதிரியான இளைஞர்களுடன் விவாதம். அப்போது என்நண்பன் கேட்டான், எம்.எஸ்ஸி விண்ணப்பம் அனுப்ப என்றுகடைசி என்று, இல்லை நான் அனுப்ப ப்போவதில்லை ,என் தந்தை விரைவில் ஒய்வு பெறப்போகிறார்,குடும்ப ப்பொறுப்பைச்சுமக்க வேண்டிய நான், படிக்கமல் வேலை தேடி என் தந்தையின் சுமையை க்குறைக்க வேண்டும், மேலும் என்தந்கை,தம்பிகளுக்கு ,நான் படித்த அளவு உதவிசெய்ய வேண்டும், என்பதால் நான்சேர ப்போவதில்லை,என்றதும் நண்பர்கள் சரி என்றனர், அந்த சமயத்தில் விண்ணப்பம் வேறு ஒரு நபருக்குக்கொடுத்து விட்டேன். இந்த விஷயத்தை என்தந்தையிடம் இன்று வரை சொல்லவில்லை, இதை தியாகம் என்றுசொல்ல முடியாது ஆனால் நான்செய்தது சரிஎன்று நினைத்ததால் என் தந்தையிடம் சொல்லவில்லை.
முற்றும்.
சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!