ஆசை நிச்சயம் உன்னை
அரக்கனாக்கும்
ஆசை தான் துன்பத்திற்கு காரணம் என
ஆறடியில் இறங்கும் போது
புரிந்து என்ன பயன்?
இப்பிரபஞ்சத்தின் அழிவு
ஆரம்பித்ததும்
ஆசையிலிருந்து தான் என்பதை
ஆறறிவு கொண்டு உணர்ந்து கொள்
புத்தனாக போதி மரமெல்லாம்
தேவையில்லை
ஆசை துறந்தாலே
நீயும்-நானும் புத்தன் தான்.
உனக்குள் இருக்கும்
சுயநலத்தை தொலைத்து
எவ்வுயிர் மேலும் அன்பு செய்
உனக்கே தெரியாமல் உனக்குள் இருக்கும்
மிருகமும்,அரக்கமும் செத்து போகும்!
-லி.நௌஷாத் கான்-