படம் பார்த்து கவி: ஆடி விளையாடும்

by admin 1
42 views

ஆடி விளையாடும்
அலைகளுக்கு தெரியாது

குமுறி கொந்தளிக்கும்
நுரைகள் அறியாது

ஒட்டி உறவாடும்
காற்றுக்கும் விளங்காது

ஆழ்கடலின்
அமைதியும்
மகிழ்ச்சியும்
குரூரமும்

🦋 அப்புசிவா 🦋

You may also like

Leave a Comment

error: Content is protected !!