உத்தம தாயே
உயிருக்குள் அடைகாத்து,
ஈரைந்து மாதங்கள்,
உன்னுள் சுமந்து,
நீயின்றி நானில்லை;
மண்னில் நான் முளைக்க
உன் வேறின்றி
வேறேதும் இல்லை; ….
இயற்கை சீற்றத்திலும்
வெள்ளி கோர்வையின்
பிடிகளுக்கு மத்தியிலும்;,
நீல நிற ஆடை உடுத்தி
நீரோடையில் நீந்த தயாராகும்;
நிறைமாத நிலவே
உன் உயிருக்காக
உயிரை தந்து
வேறூன்றியிருக்கும் ;
பூமி தாயின் மீது தன் உயிரை
சுமக்கும் ஒவ்வொரு ஜீவனும்
உன்னை போன்று
தலைசிறந்த ❤️…..உத்தம தாய்தான் …..❤️✍🏼 ஆர்.இலக்கியா சேதுராமன்.
படம் பார்த்து கவி: உத்தம தாயே
previous post