- உறக்கம் *
கோடி உறவுகள் கூடியிருந்தாளும்
எனை தாலாட்டிய உன் மடி எங்கே;
நான் உறங்கும்
ஊஞ்சலான உன் மடி
எங்கே;,,,,!
பத்து மாதம் காத்திருந்தேன் உன்
முகம் காண….!
தேடி தேடி தரையிலே வடித்து
விட்டேன் என் மகாராணியை….
தெரு கோடியில் இருந்தாளும்
உன் தொப்புள் கொடி
நான் தானே …..!
கனவிலாவது உன் மடி வரம்
வேண்டும் என கண்மூடி
தவமிருக்கிறேன் ….!
இவ்வுலகில் நான் வாழ
உன் வேறின்றி
வேறேதும் இல்லை ….!!
உன் வரை படத்தை வரைந்து
பார்கிறேன்,,,!!
தொலைந்த என் இன்பத்தை
நான் வரைந்த உன் ஓவியத்தில்
பார்க்கிறேன்,,,,!!
கனவிலாவது உன் மடி
வேண்டும் என்று உறங்கி
தீர்க்கிறேன்…..!!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)