எட்டாத உயரத்தில்
உன்னை வைத்து
தினமும் ஏங்க வைக்கிறான்
இறைவன்
என்
கனவில் மட்டும் நீ
நனவில் நீ இல்லையே
என்ற ஏக்கத்தில்
என் கண்களில்
இருந்து நதி போல்
ஒடிய நீரால் என்
ஆடை முழுமையாக
நனைந்து கொள்ள
உயிர் பிரியும்
வலியை உணர்ந்தேன்
உன் பிரிவில்
அன்பே
நிலவு தேயலாம்
உன் நினைவுகள்
தேயாது
என் ஆயுள் வரை
என்பதை நீ அறிவாயா
சொல் அன்பே
என் அன்பே
M W Kandeepan