“என்ன வேண்டியதும் செய்யலாம்…
எங்கு வேண்டுமானாலும் போகலாம்…
எதிரிகள் யாரையும் தாக்கலாம்.
எல்லோரின் கவசமும்
எல்லோரின் தெய்வமும்
உலக ஆதி சக்தியும்
நீதான்…
உனது சுதந்திரம்
உனதே…”
என்றெல்லாம் கதைத்ததை மனதில் ஏற்றி
இறுமாந்து
கனவுலக நீலமாயையில்
பெருமிதமாய் சுற்றும்போது சொன்னான்…
Game over.
🦋 அப்புசிவா 🦋
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)