எரியும் மெழுகுவர்த்தி போன்றவர்கள்
பிரவாசிகள்
வானுயர பறக்கும் விமானத்தை விட
வலிகளை சுமக்கும் அவர்களின் கனவுகள் பெரிது
தனக்காக மட்டுமே வாழும் சுயநலக்கார உலகில்
தன்னை பற்றி எதுவுமே சிந்திக்காமல்
தன்னை சார்ந்தவர்களுக்காகவே வாழும்
மனிதம் உள்ள மனிதர்கள்
அடுக்கு மாடி கட்டிடங்கள் நிறைந்திருக்கும் நவீன நகரத்தில்
அவர்கள் வாழ்க்கை என்னவோ
அடுக்கு மாடி கட்டிலில் தான்
அறுசுவை உணவெல்லாம் மறந்து
காய்ந்த குபுஸ்களை
வருடக்கணக்கில் சாப்பிட பழகியவர்கள்
தொலைதூரம் கடந்து வந்தாலும்
தொலைபேசியிலேயே தங்கள் குடும்பத்தை நடத்த பயின்றவர்கள்
அடிக்கும் பாலைவன வெய்யிலும்
கொதிக்கும் தண்ணீரில் குளிக்க கற்றுக் கொண்டவர்கள்
சொல்வதற்கு இன்னும் நிறைய கதைகளும்,வலிகளும் உண்டு
ஏனோ
தன்னையே வருத்தி கொண்டு ஒளி தரும் மெழுகாய் தன்னை சார்ந்தவர்களுக்காக உருகி அதில் மாயும்
விட்டில் பூச்சிகள் நாங்கள்!
-இப்படிக்கு-
அயல்நாட்டு பிரவாசிகள்
-லி.நௌஷாத் கான்-