எள்ளு வயல் பூக்கயிலே
எனை விடுத்து போனவளே..
ஈரைந்து மாதங்கள், எனை சுமந்து பெற்றவளே..
ஈரைந்து நாட்கள் கூட, எனை தூக்கி கொஞ்சலையே..
உன் வாசம் அறியா பிள்ளை இவள்,
என் ஏக்கம் புரியலையா?
ஏன் விட்டு சென்றாய் என்னை..
கண் மூடி தேடுகிறேன்,
காற்றுடன் கலந்த உன்னை..
மடி சாய வேண்டுமென,
உன்னை நான் தேடுகிறேன்..
தலை கோதி விடுவதற்கு,
தாயே நீ வருவாயா?
தாயில்லா பிள்ளையாக,
தரணியில் வாழ்வது கடினமென்று,
புதிய தாயை அழைத்து வந்த, தந்தையிடம்
எப்படி சொல்வேன் அம்மா
அன்னை இல்லையென்றால் மனம் மரிக்கும்,
அன்னம் இல்லையென்றால் உடல் மரிக்குமென்று,
என்னுடன் நீ இருக்க,
சாத்தியம் இல்லை என்றால்..
உன்னுடன் நான் இருக்க – எனை
எடுத்துக் கொள் அம்மா..
- அருள்மொழி மணவாளன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)