தாயை இழந்து…
தனிமரமாய்
தவித்திருந்தேன்….
அவள்
ஒரு கோப்பை ஏந்தி
வந்து
என் பக்கத்தில் அமர்ந்து
அன்(பால்) காபி
தந்தாள்….
இன்னும் என் நினைவில்
அவள் அன்பால்
அரவனைத்து
முத்தமிட்டு சென்றது
போல் உள்ளது….
மீண்டும்…
ஒரு முறை உன் மடியில் என்னை
உறங்கிட செய்ய
மாட்டாய……?
ஒரு முத்தமாவது
தந்துவிடு……
அன்பால் வசபட்ட
ஒரு குழந்தை போல்
தவிக்கிறேன்……
— இரா. மகேந்திரன்—
படம் பார்த்து கவி: ஒரு காலை பொழுதில்
previous post