ஒளி கொடுக்க
வழிதெரியும்_
ஏனெனில்
வலி இல்லாது
ஒளி இல்லையே!
வளி கொஞ்சம் என்
வழி வந்தால் நானும்
ஒழிந்து போவேன்_
வேறு
வழியே இல்லாது..!
இறைவன் வழியில்
ஒலியில்லாது…
அமைதி வழியே _ என்
ஒளி!
சமாதான ஒலி பெருகட்டும்!
அகிம்சை வழி
மலரட்டும்!
உறவு முழுதும்
அன்பு ஒளி பரவட்டும்!
நான் உருக.. என் ஒளி பெருக… உலகம்
உயர்வு பெறட்டும்!