கண்ணாடிக் குடுவையில்
மெழுகின் ஒளியில்
அழகுற மிளிரும்
வண்ண மலர்கள்
தான் உருகி
சுற்றிலும் ஒளிர
தன்னுயிரைத் தரும்
மெழுகு விளக்குகள்
மிளிரும் மலர்கள்
விளக்கின் சூட்டில்
கருகி வாடினாலும்…….
நேசக்குரிய நங்கையின்
இதழ் சிந்தும்
புன்னகைக் காதலை
உணரா இதயத்தில்
தொடங்கும் பாதை
எங்கும் வாடாத
(ப்ளாஸ்டிக்)
நெகிழிப் பூக்கள்
பத்மாவதி