காங்கிரீட் கரையின் நடுவே
நலினமாய் நடை புரியும்
நதியே!
கதிரவன் கரம் பட்டு
அங்கமெல்லாம்
தங்கம் போலே
மின்னுவதேன்?
இரு கரையை
இணைக்கும் தரைப்பாலம்
இடையே நீ ஓடும்போது
சிறைபட்ட கைதியாய்
தோன்றுவதும் ஏனோ?
கரை உடைக்கும் காலம்
நெடு நேரம் இல்லை
தரைப்பாலம் மீது
இளம் ஜோடி இரண்டும்
வளம் வரும் ஊர்தி
இணைந்து இருப்பது
கண்டு இளம் நெஞ்சில்
மோகத்தீ மூண்டது
மோகத்தால் தானே
வேகத்தில் தேக்கம்
நாணத்தால் என்று
நீ எண்ண தோன்றும்