காதல் உறவு
நெடுநாள் பழக்கம்
தளராத உறவில்
காதல் பிறப்பதில்லை
உயர்ந்த எண்ணமாக
எழில் மிக்க கனவாக
ஆவியில் உறையும்
அடங்கா உணர்ச்சியாக
ஒரு கணம்
நெஞ்சப் பிணைப்பில்
பிறப்பதே காதல்
அந்தப் பிணைப்பு
அந்த ஒரு கணத்தில்
உருவாகாவிடில்
பல ஆண்டு
பல தலைமுறைகள்
காத்திருந்தாலும்
காதல் உருவாகாதே.
க.ரவீந்திரன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)