காதல் நெஞ்சம்
ஆத்மார்த்த அன்பு
பரிமாறா இதயம்
பதியும் தழும்பே
காதல்❤️🩹
மனம் மறைக்க
விழிகள் விரிய
பேச்சற்ற மெளனமே
காதல்💕
உனக்காக உன்னை
விட்டு கொடுப்பதில்
உள்ள நேசமே
காதல்💔
காலங்கள் கடந்தும்…..
மலருக்குள் மறைந்த
மணமாக மனதோரமாய் ஒளிந்திருக்கும் காதலோடு
காத்திருக்கிறேன்………..
கண்ணனின் ராதையாக💕
வெறும் கிறுக்கல்களை
வண்ண கற்பனைகள்
கோர்த்து ரசனையோடு
எண்ண ஏட்டில்
கவிமாலை தொடுத்து
களிநடம் புரியக்
காத்திருக்கும் காதல் நெஞ்சம்💝
பத்மாவதி
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)