கோரப் பல்லைக் காட்டி கொடூரமாய் சிரிக்கும் கொலைகாரன்… இரத்தம் சொட்டச் சொட்ட சிசுவை சிதைத்து வேடிக்கை பார்ப்பது என்ன… பாவையரைச் சிதைத்து பல்லை இளிப்பதில் உனக்கென்ன இன்பம்… நீ இருப்பது நீரிலா நிலத்திலா இனங்காண முடிவதில்லை… உன் சுயரூபம் தெரிவதில்லை… உன் வீடு பள்ளியா? பாதையா? அரண்மனையா? அரசியலா? எச்சில் வடிய வடிய உச்சி சுறுக்கிடவே. உசிரெடுத்த படுபாவி… உன் கோரப்பசிக்கு இரையாவதில் சிறிது பெரிது என்ற அளவில்லையா …? மெய்ம்மை ஆயும் போதெல்லாம்… பொய்யாய் வடிப்பது கண்ணீரா…? வினாக்களைத் தொடுப்பது… வசந்தாரஞ்சனி … காலம் ஒரு நாள் பதில் சொல்லட்டும் .
Arulraaj vasantharaajan
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)