சாத்தான் :
“நித்தமும் சித்தத்தில்
யுத்தமே!
உடலுக்குள் உருளுது
காமமே!
போதைக்கு நானுமோர்
தாசனே!
நாவது பொய்யைத்தான்
பேசுதே!
பஞ்சமா பாதங்கள்
யாவுமே…
கொஞ்சமும் குறையாது
என் நெஞ்சிலே!
சுத்தனாய் வாழ்வதில்
சுகமேது?
சாத்தானாய் இருப்பதில்
தவறேது?”
புத்தன் :
“இருளொன்றே
மெய்யென்று
பாவங்களில்
சிக்குண்டு
மாயையில் தவிக்கும்
மானிடமே…
ஒளியிலேயே
வாழ்வுண்டு
உனக்குள்ளும்
புத்தனுண்டு
மெய்யறிவால் கற்றிடுவாய்
ஞானமே!”