தூறல் விடாத
மழை மேகம்..
மேகத்தின் தண்ணீர்
பூக்கள் சொரியும்
இலைகளின் தாகம்! மண் மணம் வீசும்
புற்கள் சுமக்கும்
ஜல கிரீடம்!
மேகத்தின் கனத்தை தாங்கிய மழைக்கும் குளிரெடுக்க..
அக்னி தேவன் இரங்கினான்…
குளிர்காய…
பரவச சுகம் எப்போதும் தரும்
கற்பக தரு.. இந்த மழை!
✍🏼 தீபா புருஷோத்தமன்
படம் பார்த்து கவி: தூறல்
previous post