தலைப்பு: தேகத்தீயில் ஒரு வேள்வி
அதிகாலை நிலவே வா வா
அசைந்தாடு மெதுவா மெதுவா
வண்ணம் மாற்றும் வானம் போலே
எண்ணம் மாறுது வண்ணம் போலே
சுழன்று ஆடும் சூறாவளி நீயோ
மன்மத காவியம் எமுதிடுவாயோ?
தாகம் கொண்ட வேங்கை போலே
தேகம் தன்னை பருகிடுவாயா?
அலையாடும் கூந்தல் தன்னை
அசைந்தாடும் ஓவிய பெண்ணே
வில்லென நீயும் வளைந்திடு கண்ணே
காமபாணம் தொடுத்திடும் போது
நித்தம் ஒரு வேள்வி நடத்து
தேகத்தீயில் எண்ணெய் ஊற்று
எண்ணம் முழுவதும் அங்கே குவித்து
இன்பம் என்று ஒன்றை தேடு
புணர்ச்சி விதியின் இலக்கணபிழையே
விகாரப் புணர்ச்சியில் விளைந்த உறவே
தோன்றல் திரிதல் கெடுதல் எல்லாம்
விதியின் வழியே வந்த விளைவே
விதி மீற வேண்டும் இன்று
விதிவிலக்காக வாழ வேண்டும் என்றும்
சர் கணேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)