படம் பார்த்து கவி: தேநீர்

by admin 1
36 views

தேநீர் குமிழிகள்


கதிரோனின் உதித்தலுக்கும் மறைதலுக்கும் இடையே

வானம் பரவும் செந்நிற குமிழிகளென

இடைவெளியை நிரப்ப எப்போதும் ஒரு தேநீர்

தயாராகிக் கொண்டே இருப்பது அவசியமாகிறது …

நூல்களை புரட்டிக்கொண்டு எழுத்துக்களை உறிஞ்சிக் கொண்டு

ஒவ்வொரு மிடறாக உள்நுழையும் குமிழிகளின்

இனிப்பு சுவைக்கு சன்னலோரம் காத்துக்கிடக்கும்

செங்கதிரோனின் நிறம் அப்படியே படிந்துவிடும்

துளி மையும் துளி சிந்தனையும்

காகிதங்களை நிரப்பி வழிந்தோட துணையாகிறது

குவளை நிரம்பிய தேநீர்…

🌺நிழலி

You may also like

Leave a Comment

error: Content is protected !!