நான் தானே உன் தெய்வம்
புத்தா!!
மனிதன் தானே நீயும்
புனிதன் ஆனது ஏனோ?
ஆசை அடக்க முயன்றாய்
புனிதன் என்று உயர்ந்தாய்
ஆசையின்றி நீயும்
என்ன பயன் அடைந்தாய்?
மண்ணுலகில் என்னால் தானே
தெய்வம் என்று உயர்ந்தாய்
நான் மட்டும் இல்லையெனில்
அனைவரும்
புத்தன் என்று பித்தனாகி இருப்பர்
உலகில் இரவு பகல் உண்டு
இரவால் தான் பகலுக்கு விடியல்
தெய்வமாக நீயும் வாழ்வது
அரக்கன் நான் வாழும் வரை
உன்னை இன்றும் வாழவைக்கும்
நான் தானே உன் தெய்வம்