நீரிலும்
நிலத்திலும்
வாழ்ந்தும்
நாங்க
யாரையும்
ஏமாற்றிப் பிழைக்கலை
பின் ஏன்
பொய்யிலேயே
வாழ்வு நடத்தும்
பொல்லா மனிதரின்
போலிக் கண்ணீரை
சற்றும் யோசிக்காது
முதலைக் கண்ணீர்
என்றீர்
இதயம் துடிக்குதே
ஏனிந்த அவச்சொல்
இந்துமதி
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)