பள்ளி செல்லும் பிள்ளைக்கு
காலையில் அழுகையைத் தரும் பாதை
மாலையில் உற்சாகம் தரும்!
காதல் மனைவி வீட்டில் இருக்கையில்
வேலைக்குச் செல்ல குறுகும் சாலை
திரும்புகையில் நீள்வதும் ஏனோ?
தலை பாரம் சுமந்த கீரைக்காரி
வண்டி தள்ளும் காய்கறிக் காரன்
பேருந்துக்கு விரையும் முதிர்கன்னி
சிட்டாய் பறக்கும் கல்லூரி மாணவி
அவளிடம் மயங்கிய கட்டிளம் காளையவன்
இணைந்த கைகளுடன் முதிர்ந்த தம்பதி
செல்லப் பிராணியுடன் கடக்கும் குழந்தை
பாதைகள் எங்கும் எப்போதும் ஒன்று தான்
பார்வையும் சூழலும் மாற்றுமே எண்ணங்களை!!
மகிழ்ச்சியில் அழகாய்த் தோன்றும் வழியும்
அழுகையின் பிடியில் நரகமாய் மாறும்!! --- பூமலர்