புதிதாய் முளைத்த கலாச்சாரம்
பிறந்தநாள் அன்று
கோயிலுக்குச் சென்று
சாமியை தரிசித்து
ஆசி வாங்கி
தன்னால் முடிந்தவரை
பிறருக்கு உணவு படைத்து
வீட்டினில் விளக்கேற்றி
பெரியவர்கள் இடத்தில்
ஆசி வாங்கி
கொண்டாடிய திருநாட்கள்
அப்பொழுது…
அடுக்கடுக்கான அணிச்சலில் மெழுகுவர்த்தியை வைத்து
ஊதி அணைத்து
வாழ்த்துப்பாடலுடன்
இனிப்பை வெட்டி
கொண்டாடப்படுகிறது
இப்பொழுது…
- அருள்மொழி மணவாளன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)