- மஞ்சள் வெயில் *
கண்ணை கவரும்
இளவேனில் காலை
கதிரவனோ மனதை
மயக்கும் மாலை
மஞ்சள் வெயிலோ
என் மனதை கைது
செய்து விட்டாய் உன்
கதிர்களால் ;…..
உறவுகளோடு
உரையாடியதை விட
என் உணர்ச்சிகளோடும்
உணர்வுகளோடும்
உனை கையில் ஏந்தி
உன்னோடு உரையாடியதில்
என் மனதை நகலெடுத்தவள்
நீயே எழுதுகோள் எனும்
பெயரில் !….
நாள் குறிப்புகளோ
நாளுக்கு நாள் என்
நூலகங்கள் ஆகின்றன;…
ஒவ்வொரு பொழுதும்
என் இதழ்களுக்காக
ஆவி பகிர
காத்து கிடக்கிறது
தேனீரோடு கோப்பைகள்:;…
கதிரவனை வாழ்த்த வந்த
மேக கூட்டங்களை
வண்ணம் தீட்ட
என் மேசை மீது காத்திருக்கும்
என் வண்ண வண்ண
எழுதுகோள்கள்;;;!!!…
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.