- மிருகம் *
அனைத்து உயிர்களும் மண்ணிற்கு சொந்தம்
என்பது எத்தனை உண்மையோ,!
இவ்வையகமும் அனைத்து
உயிர்களுக்கும் சொந்தம்….!
உருவத்தினால் மிருகமானாலும்
உயிரினம் என்பது உண்மை,!
கரடுமுரடான உன் தேகத்தினுள்ளும்
உள்ளம் ஒன்று உண்டு …!!
ஆக்ரோஷமான பற்றகளை
கொண்ட உருவம் என்றாலும்
அன்பென்ற ஒன்று
உனக்குள்ளும் உண்டு;…!!
யாருமில்லா வேலையில்
யாரோடு உரையாட
எங்கிருந்து வருகிறாய் …!!
அண்டை நாட்டு தோழனே
உன்னை பற்றி சொல்லும்
உன் சென் நிற விழிகள்…!!
அடர்ந்த வனத்தில் தன்னந்தனியாய்
தவழ்ந்து வரும் உனக்கு
ஆறுதல் கூற யாரோ …..!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)