வாழ்க்கை – மெழுகு
கண்ணாடி குவளையில் ஒரு வாழ்க்கை. – என்னை
சூழ பல வேட்கை.
லவண்டர் பூக்கள் கொஞ்சம்.
பாச வரம்புகள் என்னை கொஞ்சும்.
நாச விரும்பிகள் என்னைக் கண்டு அஞ்சும், – ஏனெனில் ,
குவளையில் சொந்தங்கள் ஒன்றாய் சேர அவர்களது நெஞ்சம் பஞ்சாகும்.
எதிரிகள் காலடியில் தூள் தூளாய் கிடைக்கின்றனவே!
என் ஆயுள் உருகா வண்ணம் உருகி வடிகின்றனவே!
நான் இறக்க சில நேரம்;-அன்று
நண்பர்கள் என்னை விட்டு தூரம் சென்று;
விட்டு சென்றனர் நான் பாரம் என்று; – என்
இறப்பினை பார்க்கின்றனர் ஓரம் நின்று.
விடைபெறுகின்றான் இவ்வுலகை விட்டு
வெள்ளை தடிமன் மெழுகாய் ஒளிகொடுத்து…
A.anish kovalston🕯️🕯️🕯️🕯️