விடியல் கற்றுக் கொடுக்கிறது நாளை மாறும் என்பதை..
மரங்கள் கற்றுக் கொடுக்கிறது மன உறுதியை.
மனிதா உன்னிடம் கற்றுக் கொள்ள வைக்கிறது
பேராசை, களவு, சாதி,. மத பிரிவு என்பவற்றையும்..
உன் பெற்றோருக்கு முதியோர் இல்லம்
நடிகர்களுக்கு சிலை பால் அபிஷேகங்கள்
பண்டிகையானால் உயிர்களை பழியிட்டு மது குடியில் ஆட்டம் போட்டு உனது குடியையே ஆட்டம் போட வைப்பதையும்..
மனிதா மனம் மாறு
ஆசைகளை தீயிட்டு
மனித நேயம் காக்க
அனைவரையும் அரவணைத்து புதிய பாதையில் பயணிக்க தொடங்கு…
✍️M.W.Kandeepan