புத்தக உலா போட்டி: கோ.பாலாஜி கார்த்திகேயன்

by admin
45 views

அனைவருக்கும் வணக்கம்,

படித்த புத்தகத்தின் அருமையான மனதிற்கு நெருக்கமான பகுதிகளை சொந்த வார்த்தைகளை கொண்டு விவரிக்க வைத்த போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு மிக்க நன்றி. (பின் வரும் கதையின் இறுதி அத்தியாயத்தை 200 முறைக்கு மேல் படித்தும் சலிக்காத எனது எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்பளித்தமைக்கு நன்றி)

பிடித்த புத்தகம் : உன்னை நான் சுவாசிக்கிறேன்
எழுத்து : திரு பட்டுக்கோட்டை பிரபாகர்

பிடித்த கதாபாத்திரம் : பிருந்தா (கதாநாயகி – காதலி)

கதாநாயகன் அச்சு பொறியியல் படித்த பட்டதாரி. சுயமாக அச்சு தொழிற்சாலை அமைத்து உழைக்க காத்திருக்கும் வருங்கால இளம் தொழிலதிபர். அவரின் இந்த சுயதொழில் யோசனைக்கு அவரின் தந்தை ஜாதகத்தை காட்டி முட்டுக்கட்டை போடுகிறார். இன்னும் இரண்டு ஆண்டுகள் சொந்த தொழில் யோசனையை தள்ளி போட சொல்கிறார்.
இந்த சூழ்நிலையில் பல்பொருள் அங்காடியில் கதாநாயகி பிருந்தாவை சந்திக்கிறார்.
கண்டதும் காதல்…..
மேலும் பல முறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து இருவரும் வெளிகாட்டி கொள்ளாத காதலை வளர்க்கின்றனர்.
ஒரு கட்டத்தில் காதலை கதாநாயகன் வெளிப்படுத்தி…..
அடுத்த முறை பிருந்தாவை சந்திக்கும் போது தொழிலில் ஏற்ப்பட்ட பிரச்சனை காரணமாக தற்கொலை பற்றி பேசி விடுகிறார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையை நூலகத்தில் வேலை செய்யும் பிருந்தா ….
கதாநாயகனை எப்படி வெல்ல வைத்தார்?  கதாநாயகனை குடும்பத்தோடு சேர்த்தாரா? காதல் கைகூடியதா? என்பது தான் மீதி கதை.

ஒரு காதல் கதையை எதார்த்தமான கவிதை நடையில் கொண்டு சென்ற விதமும்  …
ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்தில் ஒவ்வொரு கவிதை துளிகளோடு தேனையும் கலந்து கொடுத்த திரு பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
முன்பே சொன்னது போல் இறுதி அத்தியாயத்தை 200 முறைக்கு மேல் படித்து விட்டேன்.
அதே கண்ணிர் துளி ….
வாழ்க்கையை ரசனையோடு வாழ வேண்டுமா!!!
பிருந்தாவை போல ஒரு பண்பட்ட பெண்ணை உண்மையாய் காதலித்தால் மட்டும் போதும் .  மற்ற எல்லாவற்றையும் அந்த காதல் கை கூட வைக்கும் என உணர்த்திய கதை அது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!