வணக்கம்,
எனக்கு மிகவும் பிடித்த கதாப்பாத்திரம் என்றால் அது ஆயன சிற்பியின் மகள் சிவகாமி தான். நரசிம்ம வர்மரை உருகி உருகி காதலித்து அவருக்காக எல்லாமும் செய்து கடைசியாக அவருக்காக வாழ்க்கையை தியாகம் செய்வாள். அவர் போரில் வென்று வீதி உலா வரும்போது அவரையும் அவர் குழந்தைகளையும் பார்த்து உணர்ச்சி வசபடுவதும் கடைசியில் மன சாந்தி அடைவதும் ஏமாற்றத்தின் உச்சம். கடைசியில் அவள் தனக்கு தானே தாலி கட்டிக்கொண்டு ஏகாம்பநாதரை திருமணம் செய்து நாட்டியமாடுவதும் அதை நரசிம்மர் மறைந்திருந்து பார்பதும் அவரை அறியாமல் அவர் கண்களில் கண்ணீர் வருவதும் உண்மையான காதல் பிரிவின் வலி.
பெண் என்பவள் தான் விரும்பிய ஒருவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாள் என்பதற்கு சிவகாமி ஓர் எடுத்துக்காட்டு. இதில் அவள் நினைத்திருந்தால் வேறு யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்திருக்கலாம்…… ஆனால் விரும்பியது கிடைக்கவில்லை என்பதால் கடவுளிடமே தன்னை அர்பணித்து கொண்டாள். பெண் மனதின் ஆழத்தை யாராலும் புரிந்து கொள்ள முடியாது என்பதற்கு சிறந்த உதாரணம் சிவகாமியே….
புத்தக உலா போட்டி: ம. வித்யா கலைச்செல்வன்
previous post