எழுதியவர்: நா.பத்மாவதி
கேள்வி 4: ஒரே நேரத்தில் விபத்தில் இறப்பது ஏன்?
இந்த கதை ஒரு மனிதனின் உள்ளக் குழப்பத்தையும், கடவுளிடம் அவன் நேரடியாகக் கேட்கும் கேள்விகளையும், கடவுள் தரும் ஆழமான ஆன்மிகப் பதில்களையும் கொண்டது. இது ஒரு உணர்ச்சி மிகுந்த, ஆழமான உரையாடல் கதை.
நடுநிசி, கடலில் ஒரு படகில் தனியாக ஒரு மனிதன்.
அவன் மனதில் கொட்டிக்கிடந்த கேள்விகள். இயற்கையின் கொந்தளிப்பும் மனித வாழ்வின் வலியும் அவனை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது.
துயரம் தாங்காமல் அவன் விழிகள் மூடி இருந்தான்.
அப்போது, படகுக்குள் மிகப் பிரகாசமான ஒளி பரவியது.
திடீரென அந்த ஒளி ஒரு உருவமாகி நிதானமான குரலில்,
“மகனே அருண், உன் இருதயத்தில் உள்ள குமுறல்களை கேள். நான் பதிலளிக்கிறேன்.” என்றார்.
அருண் பயந்து அதிர்ச்சி கலந்த வியப்போடு “நீநீ…?” என இழுத்தான்.
“நானும் உன்னை போல ஒருவன் தான், நீ எப்போது உன்னை நினைக்கிறாயோ, அப்போது நான் பிறக்கிறேன்.”
என்றார். ” சரி உன் கேள்விகளை கேள் அருண்” என்றார்.
4. ” ஒரே நேரத்தில் விபத்தில் இறப்பது ஏன்? ஒரே நேரத்தில் பலர், குழந்தைகள் உட்பட, மரணம் அடைவது ஏன்?
பிஞ்சு குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள். இது எனக்குப் புரியவில்லை.” என்றான் அருண்.
” உயிரின் பயணம் தனிப்பட்டது. ஒரு உயிரின் பாய்ச்சல், மற்றொரு உயிரின் விழிப்பாகலாம். ஒரே நேரத்தில் நிகழ்வது. அவர்களுக்கு விதிக்கப்பட்டது. நேரத்தின் சங்கமம். இது நமக்கு அய்யோ பாவமாகத் தெரிந்தாலும், சிலரின் விதி. வாழ்க்கையின் திட்டம். மறைவின் வெளிச்சமே பிறப்பின் முகம். எல்லாம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது.”
என்றார் இறைவன்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.