இதயத்திற்கு உணவு 

by Nirmal
168 views

உடல்நலத்துக்கு மிக முக்கியமானது ஆரோக்கியமான உணவாகும். இதய நோய்களைத் தடுப்பதற்கு ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது சிறந்த தீர்வாகும்.

sample picture of heart

பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது இதயத்துக்கு நல்லதாகும்.

பீன்ஸ், கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது குறைவான கொழுப்பு கொண்ட பால் பொருட்கள், இறைச்சி, மீன் ஆகியவற்றை உணவில் அளவாக சேர்த்துக் கொள்வதும் நல்லதே.

உப்பு, சர்க்கரை போன்றவற்றைக் கூடுமானவரை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

நிறை கொழுப்பு, நிறைவுறாக் கொழுப்பு ஆகியவற்றை அளவுடன் எடுத்துக்கொள்வதை விட எடுக்காமல் தவிர்த்துவிடுவதே சால சிறந்தது.

sample picture of healthy foods

இருப்பினும், அதற்கு மாறாக கொழுப்புச்சத்துக் கொண்ட பாதாம், அக்ரூட், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

இதயத்திலுள்ள கெட்ட கொழுப்புச்சத்தைக் குறைக்க இவ்வகையான உணவுப்பொருட்கள் உதவுகின்றன.

sample picture of fruits

ஒருநாளில், ஐந்து அல்லது பத்து முறை பழங்கள், காய்கறிகளைக் கொஞ்சமாகச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லதாகும்.

பழங்கள், காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக்கொள்வதால் இதய நோய்கள், ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்புச்சத்து ஆகியவைகளை கட்டுபாட்டில் வைத்திருக்கலாம். 

சூரை (Tuna), சல்மன் (Salmon) ஆகிய மீன் வகைகளை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொண்டால் இதய நோய் ஆபத்தைக் குறைக்கலாம்.

sample picture of fishes

மது அருந்தும் பழக்கம் இருந்தால் அதைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வது இதயத்துக்கு நல்லது. கட்டுக்கடங்காத மதுப் பழக்கம் இதயத்துக்கு ஆபத்தையே விளைவிக்கும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!