உங்கள் பெயர்:
பானு
வெளியிட்டிருக்கும் புத்தகங்கள்:
ஒரே ஒரு புத்தகம்தான் வெளியாகியிருக்கு உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உங்கள் படைப்புகள் கிடைக்கும் இடம்: ப்ரஷா பதிப்பகம்
1. உங்கள் படைப்பிற்கான தேடலின் போது நீங்கள் கண்டறிந்த அல்லது கற்றறிந்த ஒரு புதிய விஷயம் என்ன?
இலுமினாட்டி பற்றிய கதை எழுதனும்னு எனக்கு ரொம்ப ஆசை.. அந்த கதைக்கான தேடலின்போது நிறைய அதிர்ச்சியான விஷயங்கள் தெரிஞ்சிக்கிட்டேன். Conspiracy theories னு நம்ம கண்டுக்காம விட்ட நிறைய விஷயங்களை கொஞ்சமே கொஞ்சம் நேரம் எடுத்து research பண்ணி பார்த்தா கூட அதுல இருக்கிற எவ்வளவோ உண்மைகள நம்மளால கண்டுகொள்ள முடியும்.
கெட்டத தேடிட்டு போகும்போது கண்டிப்பா நல்லதும் இருக்கனுமே.. அப்படித்தான் எனக்கும் கெட்டதுக்குள்ள இருந்தே நல்ல விஷயங்கள் முக்கியமா நம்ம சாப்பிட வேண்டிய இயற்கை உணவுகள், மூலிகைகள் பத்தி தெரிஞ்சிக்கிட்டேன்.
2. உங்கள் எழுத்தில் உருவான எந்த கதாப்பாத்திரத்தின் வழி தற்போதைய உலகத்தை நீங்கள் காண விரும்புகீறீர்கள்?! அது ஏன்?
நான் எழுதின எல்லா கதாபாத்திரமும் நல்லது கெட்டது கலந்த நம்மைப் போன்ற சதாரணமானவர்கள். குறிப்பிட்டு சொல்ற மாதிரி இப்போதைக்கு ஒருத்தரும் இல்லையே.
3. நீங்கள் எழுத யோசித்த அல்லது தயக்கம் கொண்ட எழுத்து வகை எது? காரணம் என்ன?
காமெடி… பேசும்போது வர்ர அளவுக்கு எழுதும்போது வர்ரதில்ல.
4. ரைட்டர் ப்லோக் (writer block) பிரச்சனையை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
ப்ரேக் எடுத்துப்பேன்
5. எழுத்தாளர்களுக்கு இருக்க கூடாதென்று நீங்கள் நினைக்கும் ஒன்றெது?
எழுதின கதைய பாதியில விட்டுட்டு போக கூடாது (நான் அதை ஒரு வேலையாவே வெச்சிருந்தேன்.. இப்போ கொஞ்சம் பரவால்ல)
6 எழுதிட நீங்கள் தேர்ந்தெடுக்கும் நேரம் எது? ஏன்?
மிட் நைட்.. எந்த தொந்தரவும் இல்லாம ஃப்ரீயா எழுதலாம்.. அந்த டைம்ல கற்பனையும் கொஞ்சம் அதிகமா வரும்.
7. அப்படி உங்களுக்கொரு வாய்ப்பு கிடைத்தால், இதுவரை நீங்கள் படித்த சங்க இலக்கிய கதைகளில் (பொன்னியின் செல்வன்/ மஹாபாரதம்/ ராமாயணம்/ இன்னும் பல) எந்த கதையின் நடையை அல்லது ஏதாவது ஒன்றை அந்நாவலில் மாற்றி அமைத்திட விரும்பிடுவீர்கள்? அது ஏன்?
பொன்னியின் செல்வன்..
பெரிசா ஒன்னுமில்ல ஒரு சின்ன மாற்றம்தான். ஆதித்த கரிகாலன உயிரோடயே வெச்சிருந்திருப்பேன்.
8. எங்கு உங்களின் கதை சார்ந்த விடயங்களை பற்றி யோசிப்பீர்கள்?
நான் யோசிக்காத இடமே இல்ல.. கதை எழுத ஆரம்பிச்சிட்டா எல்லா இடத்துலயும் அதை பத்தியே யோசிச்சிட்டு இருப்பேன்
9. எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டுமென்று நீங்கள் நினைக்கும் ஒன்றெது?
கற்பனை வளம், சொல் வளம்
10. நீங்கள் எழுதியதில் உங்களின் மாஸ்ட்டர் பீஸ் எது? ஏன்?
கனலில் மலர்ந்த கமலம்.. எனக்கு அழுத்தமான கதைகள்தான் பிடிக்கும். அந்த கதை மிகவும் அழுத்தமானது
11. நீங்கள் எழுதியிருக்கவே கூடாதென்று நினைத்த உங்களின் ஒரு படைப்பு எது?
எல்லா படைப்பும் 😂😂 ஆரம்பிச்சதுல இருந்து முடிக்கிற வரைக்கும் தினமும் பொங்கல் வாங்கிட்டே இருப்பேன்
12. எழுத்துத் துறையை பொறுத்த மட்டில் உங்களின் தாரக மந்திரம் என்ன?
எழுதனும்னு எடுத்த கதைய யாருக்காகவும் மாற்றம் செய்யக்கூடாது.