ஒரு பக்க போட்டிக்கதை: தாயுள்ளம்

by admin
47 views

எழுத்தாளர்: கௌரி

எங்கள் வீட்டில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு நாய்க்குட்டி வெகு நாட்களாக டைகர் எனும் பெயரில்பராமரிக்கப்பட்டு வந்தது.

அன்று அந்தி சாயும் நேரம் நானும் என் மகள் லக்ஷ்மியும் பூங்காவிற்குச் சென்றோம்.

வானம் இருட்டில் கொண்டு வந்தது. லஷ்மி வா வீட்டிற்குப் போகலாம் என்றேன். இல்லப்பா மழை தூற ஆரம்பித்ததும் போய்விடலாம் என்றாள். சரி கூப்பிடு தூரம்  தானே வீடு அதனால் விட்டுவிட்டேன்.

என் கைபேசியில் அழைப்பு வரவே பேசிக் கொண்டே பூங்கா வாயிலுக்கு வந்து விட்டேன். சிறிது மழை தூற ஆரம்பித்ததும் நான் அழைப்பு நபரிடம் பேசிக் கொண்டே வீட்டிற்கு வந்துவிட்டேன். அவ்வளவு முக்கியமான பண விஷயம் பேசியதால் மகள் லஷ்மியை அழைக்க மறந்தேன் எனலாம். மழை நேரமானதால் வானம் கும்மிருட்டாக மாறியது.

என் சம்பாஷணை முடிந்தபாடில்லை. இரவு பத்தரை மணியை நெருங்கியது. அழைத்தவரிடம் நானாக நன்றி நாளை நேரில் பார்க்கலாம் என பேச்சை முடித்து லஷ்மி எனும் போது சுறீரென்று உரைத்தது. மகளை பூங்காவில் விட்டு விட்டு வந்து விட்டோமே என்று.

நான் வீட்டில் பராமரித்த டைரக்டரும் எங்கு போனதெனத் தெரியவில்லை. எப்படி மறந்தேன் ? என்ன செய்வேன் எனக்குள் பேசியபடியே பூங்காவிற்குச் சென்றேன். டைகரைப் பார்த்து விட்டேன். எங்கடா லஷ்மி என அலறினேன். வாலாட்டியபடி புதருக்குள் அழைத்துச் சென்றது.

அங்கு கண்ட காட்சியில் நெஞ்சம் பதறியது. லஷ்மி என்று ஓலமிட்டு அருகில் சென்றேன். குழந்தையின் மேல் மரம் முறிந்து விழுந்தது இருந்தது. குழந்தை பயத்தில் அப்பா அப்பா என்று முனகினாள். அவளை மரத்தை அப்புறப்படுத்தி மீட்டேன். மருத்தவ மனைக்கு ஓடி வைத்தியம் செய்து வீடு திரும்புகையில் டைகருக்கு கண்ணீரால் நன்றி செலுத்தினேன்.

டைகர் வாலை ஆட்டி , நாவினால் நக்கி அன்பைக் காட்டிக் கொண்டே வேறு இடத்திற்கு கூப்பிட்டது. பார்த்தால் டைக்ரிஸ் அம்மா நன்றியுணர்வோடு என்னைப் பார்த்தாள். உணர்வு நமக்கு மட்டுல்ல விலங்கினங்களும் தான் உணர்ந்தேன்.

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

Leave a Comment

error: Content is protected !!