எழுத்தாளர்: சுகந்தி குமார்
மாலை 6 மணி. இதற்கு மேல் சோஃபாவில் உட்கார்ந்து இருக்க முடியாது என்று ராஜி தன் அறைக்கு கிளம்பினாள். மகன் கோபால் ஆபீஸில் இருந்து வரும் வரை முன் அறையில் இருக்க ஆசை தான். ஆனால் இந்த முதுகு வலி என்னுடன் தான் போகும் போல என்று முனகிக் கொண்டே போனாள்.
“சித்தி, சித்தி’ குரல் கேட்டு தன் அறையில் படுத்து இருந்தவள் எழுந்து உட்கார முயன்றாள் . ஆபிஸுக்கு போகும் பொழுதும் வந்த பின்னரும் சித்தியைப் பார்த்தால் தான் கோபாலுக்கு மனசு சமாதானம் ஆகும். இருக்காத பின்ன .
சித்தி ராஜி கோபாலின் அப்பாவை மணந்து கொண்டு வந்த பொழுது அவன் 4 வயது. குழந்தை பெற்ற அம்மாவின் அணைப்பு கிடைக்கவில்லை. கோபால் பிறந்ததில் இருந்தே அவன் தாய் கோமதி நோய் வாய்ப்பட்டு விட்டாள். இருதய நோய் அறுவை சிகிச்சை . மருத்துவ மனைக்கும் வீட்டுக்குமே கோமதியுடன் அலையவே தந்தை சங்கருக்கும் . நேரம் . சரியாக இருந்தது. உறவினர்கள் தமிழ் நாட்டில். இவர்கள் வடநாட்டில் இருந்ததால் சமையலுக்கு உதவியாக இருந்த ராஜி தான் கோபாலை வளர்த்தாள்.
சிகிச்சை பலனின்றி . கோபாலின் தாய் கோமதி இறந்த பின் சங்கர் நிலை குலைந்து. விட்டான். ராஜி ஏழ்மை குடும்பத்தில் பிறந்த குணவதி. நண்பர்களும் உறவினர்களும் சேர்ந்து ராஜியின் பெற்றோர்களிடம் பேசி கோபாலுக்கும் ராஜிக்கும் திருமணம் செய்வித்தார்கள். கோபாலின் மீதுள்ள பாசத்தால் ராஜி அவனுக்கு தாய் இல்லாத குறை தெரியாமல் பாசத்தை பொழிந்தாள்.
சங்கரும் ராஜியும் கோபாலை சீராட்டி வளர்க்க யார் கண் பட்டதோ சங்கருக்கு புற்றுநோய் வந்து அவதிப்பட ராஜி கோபால் சங்கர் இருவரையும் நன்றாக கவனித்துக் கொண்டாள்.
விதி யாரை விட்டது. கோபால் பள்ளி படிப்பு முடிக்கும் தருவாயில் சங்கரையும் இறைவன் அழைத்துக் கொண்டார். இறக்கும் தருவாயில் ராஜியிடம் கோபாலை நன்றாக பார்த்துக் கொள் என்று சொல்ல வேண்டிய தேவை இல்லை என்ற நம்பிக்கை சங்கருக்கு இருந்ததால் கோபாலிடம் கடைசி வரை உன் தாயான ராஜியை நன்றாக பார்த்துக் கொள் என்று சொல்லி விட்டு போனார்.
கோபால் நல்ல பதிவியில் இருந்ததால் சொந்த வீடும் சேமிப்பும் இருந்தது.
ராஜியும் ஓரளவு படித்து இருந்ததால் சங்கர் ஆபீஸில் வேலை கொடுப்பதாக சொன்னதை ராஜி தனக்கு வேலை வேண்டாம் என்றும் என் மகன் கோபால் படிப்பு முடித்த பிறகு அவனுக்கு வேலை கொடுக்குமாறு வேண்டினாள். கோபால் படித்து முடித்து வேலையும் கிடைத்து விட்டது.
இடையில் ராஜி தாயும் தந்தையுமாக இருந்து கண்ணும் கருத்துமாக கோபாலை கவனித்து கொண்டாள்.
சேமிப்பு எடுத்து செலவு செய்தால் எவ்வளவு நாட்கள் ஓடும் எனவே. ராஜி வீட்டு வேலையையும் பார்த்துக் கொண்டு வடகம் ஊறுகாய். பட்சணங்கள். என்று செய்து சங்கரின் ஆபீஸ் நண்பர்களின் உதவியால் வியாபாரம் செய்ய ஆரம்பித்தாள். கடுமையான உழைப்பால். பணம் சம்பாதித்து கோபாலை படிக்க வைத்தாள். மகன் நன்றாக படித்து முடித்து வேலையில் சேர வேண்டும் என்று வேண்டாத தெய்வம் இல்லை. செய்யாத பிரார்த்தனைகள் இல்லை.
ராஜி யின் தாய் பாசத்தை மெச்சிய இறைவன் அவளுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டார். கோபால் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து வேலையிலும் சேர்ந்து தாயின் உழைப்பு வீண் போக விட வில்லை.
ராஜி தனக்கு தெரிந்த ஒரு நல்ல குணமுள்ள பெண்ணை பார்த்து திருமணம் செய்வித்து மகிழ்ந்தாள்.
ராஜி நினைத்து இருந்தால் அவள் கௌரவமான பதவியில் இருந்து உழைத்து உத்தியோகத்தில் சிறந்த இடத்தைப் பிடித்து பிடித்து இருக்கலாம். ஆனால் அவள். கோபாலுக்கு. தாயாக மட்டுமே வாழ்ந்து. தன் வாழ்க்கையை கோபாலுக்காகவே அர்ப்பணித்த பெண்.
கோபாலை பெற்றவள் இருந்தால் என்ன செய்வாளோ அவ்வளவையும் செய்தவள் ஆயிற்றே ராஜி. இவற்றை எல்லாம் அறிந்த கோபாலின் மனைவி விமலாவும் கோபாலும் சேர்ந்து தாயிற் சிறந்த கோவிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று ராஜியை. தெய்வமாகவே கொண்டாடினார்கள்.
ராஜி மாதிரி இருக்கும் பெண் பெறா விட்டாலும் போற்றப் பட வேண்டிய தாய் தானே.
முற்றும்.