ஒரு பக்க போட்டிக்கதை: பாஸ்போர்ட்

by admin
57 views

எழுத்தாளர்: ரங்கராஜன்

சேகரன் ஒரு அரசு ஊழியர். அவரின் மனைவி மேகலா அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர். ஒரே மகள் லாவண்யா பத்தாம் வகுப்பு மாணவி. 
             சேகரனின் அலுவலகத்தில் பணிபுரிந்த  காலத்தில் அவரின் அலுவலக ஊழியர்  வந்து சார் உங்களைத்தேடி  ஒருவர் வந்திருக்கிறர், என்றதும், வரச்சொல் என்றதும், சார்  என் பெயர்  மனோகரன்,  சுமார் 20 ஆண்டுகளுக்கு
  முன்பு  நீங்கள் கொடுத்த பாஸ்போர்ட்  மூலமாக த்தான் நான் துபாய் போய் சம்பாதிரித்து வந்த வாழ்க்கையில் செட்டிலாகி விட்டேன்.
              அதற்காக உங்களைப்பார்த்து விட்டு ப்போக வந்தேன் என்றதும், மனோகரன் இது ஆபீஸ்  நேரம், மாலை 6/30மணிக்கு வாங்க  ,பேசலாம் என்று அவரை அனுப்பி விட்டு, ஆபீஸ் வேலையில் மூழ்கினார். மாலை சரியாக 6/30மணிக்கு மனோகரன்  வர,சேகரனும், மனோகரனும் அருகிலிருந்த ஒட்டலுக்கு சென்றனர்.
               மனோகரன், சேகரனிடம் பழைய நினைவுகளில் மூழ்கினார். 
 1980களில் பாஸ்போர்ட் படிவம், தலைமை தபால் அலுவலகத்தில் தான் கிடைக்கும். அதுவும் காலை குறிப்பிட்ட நேரத்தில் படிவம் கிடைக்கும். ஆதார்,வாக்காளர் அட்டை வராத காலமிது. ஏன் தபால் அலுவலகத்தில் தரும் அடையாள அட்டைக்கூட கிடையாது. தபால் அலுவலக அஞ்சல் அதிகாரி முன்னால் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர் கையொப்பம் இட்ட பிறகு அதனை  அஞ்சல் அலுவலக அதிகாரி சான்றொப்பம் செய்வார்.
          சேகரன் முதலில் தற்காலிக வேலைபார்த்த போது, அமெரிக்கா செல்ல பாஸ்போர்ட் விண்ணப்
பத்துடன் ,பொது மக்கள் நிற்பதை பார்த்து, அதன் மேல் விருப்பமில்லாமல் வெறுப்பு தான் சேகரனுக்கு ஏற்பட்டது. 
            தற்காலிகவேலை என்பதால், சேகரன் தன்விருப்பப்படி, சைக்கிளில் செல்வார். ஒருநாள் காலை 8/00மணிக்கு அந்த பக்கம் சென்ற போது, கூட்டத்தில் நின்ற ஒருவருக்க
 சுமாராக 30வயதிருக்கலாம்,தம்பி,  தம்பி என்றபடியே சேகரனைக்
கூப்பிட என்ன என்றவுடன்,டிபன் சாப்பிட்டு விட்டு வரும் வரை என்னுடைய இடத்தில் நின்றுகொள் என்றதற்கு,சேகரன், சரி பாவம் என்றபடியே வரிசையில் நிற்க, சொன்னபடியே, கொஞ்ச நேரத்தில் வந்த அந்த நபர், ரொம்ப தேங்க்ஸ்,
என்றபடியே வரிசையில் நிற்க,நீங்கள் எந்த ஊரிலிருந்து?என்றதற்கு திருச்சியிலிருந்து ராக்போர்ட் எக்ஸுபிரஸ்ஸில் காலை 4/00
மணிக்கு  வந்தேன் என்றதற்கு, சார், ராக்போர்ட் காலை 5/00மணிக்கு என்று சொல்ல, ஆம்னிபஸ்ஸில் வந்தேன் என்றதும் சேகரன் அங்கிருந்து கிளம்பி விட்டார்.
              அதனால் தான் பாஸ்போர்ட் வாங்கவே சேகரனுக்கு விருப்பமில்லை. மேலும் எந்த வெளிநாட்டுக்கும் செல்ல விருப்பமில்லை. சேகரன் மற்றும் அவனின் நண்பர்கள் மாலையில்  பனகல் பூங்காவில் உட்கார்ந்து அரட்டை அடித்து அரசியல், இலக்கியம், சினிமா பேசி உட்லாண்ட்ஸ் ஒட்டலில் காபி குடித்த பிறகு அவரவர் வீடு நோக்கி பயணம்.

               இதனிடேயே சேகரனின் நண்பர்கள் இருவர், துபாய்க்கு வேலைக்குச்சென்றனர்.அவர்களுக்கு பாஸ்போர்ட், விசா மற்ற உதவிகளை சேகரன் செய்ய, வீட்டுக்கு அடிக்கடி வருவார்கள். சேகரன் அவன் மாமா வீட்டில் தங்கிஇருந்தான்.துபாய்க்கு வேலைக்கு சென்ற இருவரும்  அந்த ஊர் வெய்யில் தாங்க முடியாமல் வேலையை வி்ட்டு விட்டு சென்னைக்கு வந்த, சேகரனைப் பார்க்க வந்த சமயத்தில், சேகரன் வீட்டில் இல்லை, அவன் பாட்டியிடம், துபாய் வேலைக்கு டாட்டா சொல்லி விட்டு வந்த தகவலை சேகரனிடம் சொல்லுங்கள், நாங்க அப்புறம் வரோம் என்றனர். 
             சேகரன் வந்த பிறகு பாட்டி உன் நண்பர்கள் துபாயில் இருந்து திரும்பி விட்டார்கள், வெய்யில் ஜாஸ்தி, நீயும்  வெளிநாடு போய் ஒன்றும் கிழிக்க வேண்டாம், இங்கேயே  வேலை கிடைக்கும் பாஸ்போர்ட்  வாங்காதே என்று தடைப்போட சரி என்று சொல்லி விட்டான்.
      சேகரனிடம் பாஸ்போர்ட் விண்ணப்பம் ஒன்று இருந்தது, மறுநாள்,பனகல் பூங்காவில் அரட்டை சமயத்தில் துபாய் மேட்டர் பேச, அந்த நேரத்தில் அந்த நண்பர்கள் இருவரும் வர அரட்டை அதிகமாகியது.
           டேய் உங்க பாட்டிகிட்டே தப்பியது தம்பிரான் புண்ணியம் என்றனர். அதற்கு பிறகு சேகரன் எனக்கும் வெளிநாடு செல்ல ஆசையில்லை, என்றதும் ,பக்கத்து சிமெண்ட் டில் ,இருந்த ஒருவர்  ,சார் பாஸ்போர்ட் பாரம் எனக்குகொடுங்க, என்றதும்,சபையோரும் அதனை சரி என்றதும்  சபையின் ஏகோபித்த  முடிவின்படி, அந்த நபரை அழைத்தக் கொண்டு வீட்டுக்குச்சென்றபோது,பாஸ்போர்ட் என் கையொப்பம், இருந்தால் ஒன்றும் செய்ய  முடியாது, பார்ப்போம் என்று வீட்டுக்குள் வந்து நபரை அமரச் செய்து, நல்லவேளையாக பார்த்தால் அஞ்சலக அதிகாரி கையொப்பம் இல்லை, மறுநாள், பாண்டி பஜார்  அஞ்சல் அலுவலகம் வரச்சொல் லி, நண்பருக்கு இடம் உதவி செய்தான் சேகரன், பெயர் ஞாபகமில்லை.
              வந்த நபர் தான் அவர்பெயர் மனோகரன்.  பழைய  விஷயங்களை பேசி தான் துபாய் சென்று நன்கு சம்பாதித்து, மணம்  முடித்து, இரண்டு பிள்ளைகளுடன் சென்னையில் செட்டிலாகி, பஸ்ஸில் பயணம் செய்த சமயத்தில் சேகரனைப் பார்த்து, அலுவலகம் வந்ததாகவும், சேகரனுக்கு உதவி செய்ய வந்ததாகவும், தெரிவித்தார்.
         சேகரன் தான் தன்னை  வாழ வைத்த  தெய்வம் என்றபடியே  பொது
இடம் என்ற கூடபார்க்காமல், சேகரன் காலில் விழுந்த நபர், சேகரனை வீட்டுக்கு வந்து சேகரன் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்றவரிடம், சேகரன் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல்,சேகரன் வீட்டுக்கு வந்தார்.
             சேகரன் மனைவியிடம் ,மனோகரனைப்பற்றி தெரிவித்தார். 
சரி இங்கே எதற்கு வந்திருக்கறார்? என்று மகள் கேட்க, பாப்பா  உன்னை நன்கு படிக்க வைக்க தேவையான பணம், உன் திருமண செலவுக்கு சேர்த்து மொத்தமாக ஒரு தொகை  தருகிறேன் என்றதும், சேகரன் உள்பட மூவரும் ஷாக்காக, சார் என் தந்தை எப்போதோ  செய்த உதவிக்கு நன்றி இதெல்லாம் வேண்டாம் ,தவறாக எண்ணமல் நீங்கள் போகலாம் என்ற  மூவரிடம்,மனோகரன் ஆச்சரியத்தில்  வாயடைத்து ப்போய் நின்றார். 

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

Leave a Comment

error: Content is protected !!