கிண்ணக் குடிலுக்குள்
வண்ணக் காதலராய்
செல்லக்கதை பேசி
கொஞ்சிக் களித்திடுவோம்!
சூடான தேகத்திற்கு
சுகமான முத்தங்களை
இதமாக பகிர்ந்தளித்து
இரண்டறக் கலந்திடுவோம்!
சுவையோடு உற்சாகம்
இவையிரண்டும் நல்கிடும்
பால் கோப்பிபோல்
ஒன்றோடொன்று கூடி
என்றென்றும் வாழ்ந்திடுவோம்!
*சித்திரவேல் அழகேஸ்வரன்*
இலங்கை
படம் பார்த்து கவி:கிண்ணக் குடிலுக்குள்
previous post