அணிச்சல் …நா எழுச்சியின்
நலம் பயக்கும்
சிற்றுண்டி
குடியானவனின்
காலை உணவு அமிர்தத்திற்கு ஈடான
கஞ்சி!
தினம் அலுவலக வேளைக்கு..
ஆளாய்ப்பறக்கும்
நகர்ப்புற நடுத்தர வர்க்கம் வயிறு நிரப்புவது
இடலியப்பம்!
மேல்தட்டு வர்க்கம் வகைகள் பலவிதம் உவகை தரும் உணவு
தினம் தினம்!
ஆனால் வாழ்க்கை
கற்றுத்தரும் பாடங்களில் முதன்மையிந்த
முடிவேயில்லாத
மாற்றம்!
அப்படித்தான் இந்த
அணிச்சல்!
மாற்றம் விதைத்த
மாற்றான் விதைத்த
மாபெரும் புரட்சி!
எத்தனையோ ஏந்திழைகளின் கனவு இந்த உணவு!
வண்ண வண்ண
அலங்காரத்தில்
ரசித்து ருசிக்கும்
அணிச்சல்
அனைவருக்கும்
ஏதோ ஒரு தருணங்களில்
தேவையாயிருக்கிறது
உணவு தர்மத்தில் உனக்கொரு கடமை உண்டு! கேளீர்…
தர்மத்தின் அளவுகோலை
ஆண்டவன் நிர்ணயிக்கவில்லை.
நம் வீட்டு நல்லபொழுதுகளை
தனித்து விடப்பட்ட
ஆதரவில்லா
-தோர்க்கென
ஒதுக்குவோம் !
உணவின் அருமை
நம் குழந்தைகளுக்கு
அங்கு புரியும்!
இந்த மாதிரி
அணிச்சலொன்று
ஆதரவில்லா குழந்தைகளோடு
புசிக்க முடியும் வேளை
அமிர்தவேளை!
இந்த மாற்றத்தின்
புண்ணிய கணக்கு நம் குழந்தைகளின் தலையெழுத்தை மட்டுமல்ல.. நம்
நாட்டின் வறுமையையும் மாற்றும்!
ஏனெனில் யாதும் ஊரே யாவரும் கேளிர்!
✍🏼 தீபா புருஷோத்தமன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)