அழகிய கண்ணே.
அழகான கயல்விழி
மங்கை உனக்கு அலங்கார
கருப்பு கண்ணாடி எதற்கு
கண்ணுக்கு கண்பட்டுவிடும்
என்ற அச்சமா என வினவ
நான் இல்லாமல் நீயா
கர்வம் கொண்ட நீள மூக்கு
நாணத்தால் சிவக்க
நிலைக் கண்ணாடியில்
ரசித்து சாளரம் வழியே
வெளியே தூக்கி எறிய
கம்பிவேலி கண்ணாடி அணிந்தது.
க.ரவீந்திரன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)